TODAY'S GOLD RATE : Gold, which rose in the morning, has fallen again do you know the price per gram? source : google
வணிகம்

Today Gold Rate : காலையில் உயர்ந்த தங்கம் மீண்டும் சரிந்தது: ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

Today Gold Rate in Chennai : நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காலையில் உயர்ந்த தங்கம் விலை தற்போது கிராமுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.

S Kavitha

Gold Price Today Decreased in Chennai :

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்த நிலையில் மாலையில் ரூ.320 குறைந்துள்ளது.

மேற்காசிய போரால் சரியும் தங்கம், வெள்ளி விலை

மேற்காசிய போர் சூழல் காரணமாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததால் , கச்சா எண்ணெய் விலை 15% குறைந்தது.

வார தொடக்கத்தில் அதிகரித்த தங்கம் விலை

இதன் காரணமாக கடந்த வாரம் தொடர்ந்து சரிவைக் கண்ட தங்கம் வார தொடக்க நாளான திங்கட்கிழமை மாலையில் மீண்டும் அதிகரித்து, ஒரு கிராம் ₹13,340 ஆகவும், ஒரு சவரன் ₹1,06,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹108,800-க்கும் விற்கப்பட்டது.

இன்று காலை அதிகரித்த தங்கம் விலை

தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் நிலையில் இன்று காலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் 1,09,360க்கும் ஒரு கிராம் ரூ. 13,670 க்கும் விற்பனையானது.

நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு

தினம் தினம் காலையில் தங்கம் விலை அதிகரிப்பதும் மாலை வேளையில் குறைவதுமாக உள்ளதால் நகைப்பிரியர்களும் மாலை நேரங்களில் தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

அந்தவகையில் நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காலையில் உயர்ந்த தங்கம் விலை தற்போது கிராமுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

அதன்படி கிராமுக்கு ரூ.320 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,350க்கும் சவரனுக்கு ரூ. 2,560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 260,000-க்கும் விற்கப்படுகிறது.

கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:

19 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,11,200

20 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,11,600

21 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,960

22 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,960

23 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,06,720

24 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,06,000

25 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,800

===