UPI Transactions Record Reach High in January 2026 UPI transactions soar to record at Rs 230 lakh crore check full details in Tamil google
வணிகம்

UPI Record : உச்சம் தொட்ட ’யுபிஐ பயன்பாடு’ : ரூ.230 லட்சம் கோடி

UPI Transactions Record January 2026 : நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை யுபிஐ மூலம் ரூ.230 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Rohini

இந்தியாவில் யுபிஐ பயன்பாடு

UPI Transactions Record Reach High in January 2026 : யுபிஐ என்பது ஒரே செயலி மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளை இணைத்து, உடனடியாகப் பணப் பரிவர்த்தனை செய்ய உதவும் இந்திய அரசின் பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிமாற்ற அமைப்பாகும்.

சில நொடிகளில் பணம் அனுப்பலாம்

வங்கி கணக்கு எண், IFSC குறியீடு இல்லாமல், ஒருவரின் UPI ID அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்தி நொடிகளில் பணம் அனுப்பலாம். பெரும்பாலான தனிநபர் UPI பணப் பரிமாற்றங்களுக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் கிடையாது.

பாதுகாப்பான பணப் பரிமாற்றம்

Google Pay, PhonePe, Paytm, BHIM போன்ற செயலிகள் மூலம் 24/7 பணப் பரிவர்த்தனை செய்யலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனிப்பட்ட PIN எண் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் (விரல் ரேகை) தேவை.

பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்

உள்நாட்டுபணப்பரிமாற்றம் முக்கியமானது என்றும் 2025 - 26 நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை யுபிஐ மூலம் ரூ.230 லட்சம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இது ஒரு புதிய சாதனையாகும்.

2022 - 23 ம் நிதியாண்டில் ரூ.139 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் தற்போது யுபிஐ இந்தியாவை தாண்டி எட்டு வெளிநாடுகளில், உள்ளூர் சட்டங்களின்படி பயன்படுத்தப்படுகிறது எனக் தெரிவித்தார்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

பூடான், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், கத்தார், சிங்கப்பூர். இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் ஆகிய நாடுகளில் யுபிஐபயன்படுத்தப்படுகிறது எனவும்

விரிவுப்படுத்த நடவடிக்கை

யுபிஐ முறையை சர்வதேச அளவில் விரிவபடுத்த மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ சர்வதேச பணப்பரிமாற்றம் கழகம்(NIPL) இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கடந்த 2014ம் G = 1 உலகளாவிய அறிக்கையின்படி, உலகளவில் நடக்கும் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் யுபிஐ மூலம் மட்டும் 49 சதவீதம் நடைபெறுகிறது என்பது தெரியவந்துள்ளது. என எழுத்து பூர்வமாக தெரிவித்தார் .