Vivo S50 Pro Mini Vivo V70 Series Launch Date in India New Model Smartphones Features Specifications Latest Update in Tamil Google
வணிகம்

Vivo : விவோவின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்- அசத்தல் அப்டேட்டில் விவோ!

Vivo V70 Series Launch Date in India : இந்திய ஸ்மாரட்போன் நிறுவனங்களின் முண்ணனி நிறுவனமான விவோ ஒரு புதிய அசத்தல் அப்டேட் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளது.

Baala Murugan

விவோவின் 2 மாடல் அறிமுகம்

Vivo V70 Series Launch Date in India : விவோ (Vivo) நிறுவனமானது வருகிற டிசம்பர் மாதம் ஒரு மினி ஸ்மார்ட்போன் (Mini Smartphone) உட்பட 2 புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. அது விவோ எஸ்50 சீரீஸ் ஆகும். இதன் கீழ் விவோ எஸ்50 மற்றும் விவோ எஸ்50 ப்ரோ மினி ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகமாகவுள்ளன.

அறிமுகத்திற்கு முன்னதாக, விவோ நிறுவனம் அதன் விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) வேரியண்டின் முக்கிய அம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 5 chipset) மூலம் இயக்கப்படுவது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவோ மினியின் சிறப்பம்சம்

இந்த சிப்செட் எல்பிடிடிஆர்5எக்ஸ் அல்ட்ரா ரேம் (LPDDR5X Ultra RAM) உடன் இணைக்கப்படும். இது அதிகபட்சமாக 9,600எம்பிபிஎஸ் வேகத்தையும், யுஎப்எஸ் 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜையும் (UFS 4.1 onboard storage) வழங்கும். மேலும் ஒரு விவோ எஸ்-சீரீஸ் ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் சிப்செட் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் உடனான டூயல் ரியர் செட்டப்புடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ப்ரைமரி கேமராவிற்கான அல்ட்ரா-சென்சிட்டிவ் பிக் சென்சார் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டிருக்கும். செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இருக்கும். மேலும் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது, விவோ நிறுவனத்தின் மற்ற பிளாக்ஷிப் மாடல்களை போலவே முழு அஃக் ஃபோக்கல் லெங்த் ஜூம் ஃபிளாஷை வழங்கும் என்றும் விவோ நிறுவனம் கூறுகிறது.

ஹான் பாக்சியாவோ வெளியிட்ட செய்தி

மேற்கண்ட விவரங்களோடு சேர்த்து, சீன மைக்ரோபிளாக்கிங் தளமான வெய்போ வழியிலான ஒரு பதிவில், விவோ தயாரிப்பு மேலாளர் ஆன ஹான் பாக்சியாவோ, வரவிருக்கும் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது 6.31 இன்ச் பிளாட் டிஸ்பிளே உடனான ஒரு காம்பாக்ட் பிளாக்ஷிப் ஆக வரும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் வரவிருக்கும் புதிய ப்ரோ மினி மாடலில் உள்ள ஹாப்டிக்ஸ் (Haptics) ஒரு எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டாரால் (X-axis Linear Motor) கையாளப்படும்.

இதோடு பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் 2.0 (3D Ultrasonic Fingerprint 2.0) அம்சம் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடைசியாக விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பாக வெளியா ஒரு லீக்ஸ் இந்த ஸ்மார்ட்போனில் 6500mAh பேட்டரி பேக் செய்யப்படும் என்றும், அது 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று பரிந்துரைக்கிறது இது எந்தளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எஸ் மாடல் இந்தியாவில் வி மாடலாகவே அறிமுகமாகும்

டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் எஸ்50 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் மாடல்கள் ஆனது இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் விவோ வி70 சீரிஸ் (Vivo V70 Series) ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சீனாவில் விவோ எஸ்30 ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைகளில் விவோ வி60 (Vivo V60) ஆக வந்தது.

இந்தியாவில் வி70யின் விலை

இந்தியாவில் விவோ வி70 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.39,990 க்கு(Vivo V70 Series Mobile Price) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் முன்னதாக அறிமுகமான விவோ வி60 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்தியாவில் ரூ.36,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்பிசியஸ் கோல்ட், மிஸ்ட் கிரே மற்றும் மூன்லைட் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து, மினி மற்றும் வி70 யின் கலர்களும், அதன் இயக்கமும் எப்படி இருக்கிறது என்று வெளியாகும் என்று காத்திருந்து பார்ப்போம்.