Volkswagen to Group lay off 50,000 employees End Of 2026 - 2030 :
ஜெர்மனியின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் Dresden நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளது.
50,000 பேர் பணி நீக்கம்
இதனால் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஐம்பதாயிரம் பேரை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெல்ஜியத்தில் உள்ள ப்ரெஸ்ஸஸ் என்ற தொழிற்சாலையை வோக்ஸ்வேகன் மூடியது.
இதைத்தொடர்ந்து தற்போது ஜெர்மனியின் Dresden என்ற நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மின்சார வாகனங்களின் ஆதிக்கம்
இன்றைய சூழலில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சந்தையில் பெட்ரோல், டீசல் அல்லாத மின்சார கார்களின் வருகையும் அதிகரித்து விட்டதால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வோக்ஸ்வேகன் கடுமையான சரிவை சந்தித்துள்ளனது.
அமெரிக்காவின் இறக்குமதி வரிகள்
மின்சார வாகனங்களின் அதிகரிப்பு, அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிகள், மின்சார வாகன சந்தைகளில் சீன மின்சார வாகனங்களின் தாக்கம் என கடந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் லாபம் சுமார் 44 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
20 புதிய மாடல் மின்சார கார்கள்
இவற்றை ஈடு செய்யும் விதமாகவும், சந்தையில் மீண்டும் வோல்ஸ்வேகம் கார்களின் மதிப்பை அதிகப்படுத்தும் விதமாகவும் தான் வோக்ஸ்வேகன் நிறுவனம் 20 புதிய மாடல் மின்சார கார்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
ரூ.1கோடியே 3 லட்சம் சேமிக்க திட்டம்
வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த முடிவால், அடுத்த நான்கு ஆண்டுகளில் 50,000 பேர் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கும் ரூ. 1 கோடியே 3 லட்சம் ரூபாயை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆட்குறைப்பு செய்வதன் மூலம் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், கட்டாய வேலை இழப்பிற்கு பதிலாக ஊழியர்கள் விருப்ப ஓய்வு அல்லது, இழப்பீட்டுத் தொகையுடன் வெளியேறும் திட்டங்களுக்கும் வோக்ஸ்வேகன் முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
89 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை
வோக்ஸ்வேகன் நிறுவனம் 1937 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி பெர்லின், ஜெர்மனியில் தொடங்கப்பட்டது . கிட்டத்தட்ட 89 ஆண்டுகால வரலாற்றில் இப்படி 50,000 நபர்களை பணிநீக்கம் செய்யவிருப்பது இதுவே முதல்முறையாகும்.