வறுமையில் இருந்து 17 கோடி பேர் மீட்பு
World Bank praises India : 2025ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி, செயல்பாட்டை கணித்துள்ள உலக வங்கி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா 17 கோடிக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றி இருப்பதை பாராட்டி உள்ளது.
உலக வங்கி பாராட்டு
நிலையான வளர்ச்சி, வலுவான பொருளாதார கட்டமைப்பு, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய போட்டியாளர் என 2025ம் ஆண்டில் உலக நாடுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்கிறது(World Bank about India Growth) உலக வங்கி.
இந்தியா வளருமா என்ற நிலைமை மாறி விட்டது, எவ்வளவு விரைவாக வளரும் என்பதே உலக அளவில் பேச்சாக இருப்பதாக உலக வங்கி கூறியிருக்கிறது.
இந்தியாவில் நிலையான வளர்ச்சி
பொருளாதார மந்தநிலை, உள்நாட்டு குழப்பம், கொள்கை மாற்றம், நிச்சயமற்ற அரசியல் சூழல், வலிமை இல்லாத அரசுகள் போன்றவற்றால் தத்தளித்து வரும் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தனித்து நிற்கிறது என்று உலக வங்கி தெரிவிக்கிறது.
சமத்துவ சமூகம் - இந்தியா முதலிடம்
குறிப்பாக, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது, பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் போன்றவற்றால் சமத்துவ சமூகத்தை உருவாக்கிய நாடுகள் பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜி7 நாடுகள் மற்றும் ஜி20 நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
94 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு
சுமார் 94 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்த நாடாக இந்தியாவை சர்வதேச தொழிலாளர் அமைப்பு. அங்கீகரித்து இருப்பதை உலக வங்கி சுட்டிக் காட்டி இருக்கிறது.
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி
யுபிஐ பணப்பரிவர்த்தனையை உலகின் மிகப்பெரிய நிகழ் நேர பணம் செலுத்தும் அமைப்பாக சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தது. இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கும் உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, அறிவுசார் சொத்து முதலீட்டில் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரம்
யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இந்தியாவின் தீபாவளி பண்டிகை இடம்பெற்றது. இதேபோன்று, மராத்திய பேரரசின் ராணுவ தளங்களை உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது ஆகியவற்றின் மூலம் இந்தியாவிற்கான சர்வதேச அங்கீகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. .
ஜன்தன் திட்டத்திற்கு பாராட்டு
மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம், ஏழைகள் உட்பட லட்சக்கணக்கான மக்களை முறைப்படியான நிதிமுறைக்குள் கொண்டுவர உதவியதாக உலக வங்கி பாராட்டி உள்ளது.
பிரபலமான மக்களாட்சி தலைவர் மோடி
75 விழுக்காடு ஆதரவுடன் உலகின் மிகவும் பிரபலமான மக்களாட்சித் தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டி உலக வாங்கி புகழ்ந்துள்ளது.
============