உச்சத்தில் தங்கம் விலை
2026 Gold Rate Predictions By World Banks : இந்தியர்களை பொருத்தவரை, தங்கம் அதில் முதலீடு செய்வது என்பது நம்பிக்கையும் பாதுகாப்பும் கொண்ட ஒன்றாகும். 2024–25ல் தங்கத்தின் விலை உலகளவில் பெரும் உயர்வினை கண்டது. சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $4,187 என்ற அளவிலும், இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.1.30 லட்சம் வரை சென்றுள்ளது. தற்பொழுது 10 கிராம் தங்கம் சுமார் ரூ.1.26 லட்சம் விற்பனையாகிறது.
2026ல் தங்கம் விலை
இத்தகைய பெரிய ஏற்றத்தைக் கண்ட பிறகு, அனைவருக்கும் எழும் கேள்வி என்னவென்றால், 2026ல் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தான். இதுபற்றி உலகின் பெரிய நிதி நிறுவனங்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க வங்கி கணிப்பு
Bank of America-வின் கணிப்பு என்னவென்றால், 2026ல் தங்கம் மேலும் 19% உயர்ந்து $5,000 வரை செல்லக்கூடும் எனக் கூறுகிறது. உலகளாவிய அழுத்தம், அரசுகளின் செலவுகள், மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் ஆகியவை விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்.
5,000 டாலர் வரை செல்லலாம்
Deutsche Bank தங்கத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளது. அவர்களின் கணிப்புப்படி தங்கம் உச்சபட்சமாக $4,950 வரை செல்லலாம். சராசரியாக $4,450 என்ற அளவில் வர்த்தகம் செய்யலாம் என இந்த வங்கி கூறுகிறது. பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி அடைந்தால் அல்லது பெடரல் வங்கியின் வட்டி குறைக்கப்பட்டால், தங்கத்தின் விலை பெரிய மாற்றங்களை சந்திக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Goldman Sachs-ன் கணிப்பு என்னவென்றால், அடுத்த ஆண்டு தங்கம் விலை 4,900 டாலர் வரை செல்லக்கூடும் என மதிப்பிடுகிறது. உலக அளவில் மத்திய வங்கிகள் பெரிய அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பது, வட்டி வீதம் குறைப்பு, பணவீக்கம் விலையேற்றத்திற்கான காரணங்களாக இருக்கும் என்கிறது.
HSBC மாறுபட்ட கணிப்பு
அதேசமயம் HSBC கணிப்பு வேறாக உள்ளது. 2026-ல் தங்கத்தின் விலை $3,600–$4,400 என்ற வரம்பில் இருக்கலாம் என்கின்றனர். உற்பத்தி அதிகரிப்பு, நேரடி கொள்முதல் குறைதல், கொள்முதலில் இருந்து வங்கிகள் விலகல் நடக்க வாய்ப்பு இருப்பதாக இந்த வங்கி கூறுகிறது. அதேசமயம், அரசியல், பொருளாதார தன்மையை பொறுத்து, தங்கத்தின் விலை உயரலாம், அல்லது நிலையாக இருக்கலாம் என்று HSBC நம்புகிறது.
இந்தியாவை பாதிக்கும் விலையேற்றம்
இந்த கணிப்புகளை பார்க்கும் போது, தங்கம் விலை உயர்வு இந்தியாவில் அதன் தாக்கத்தை நேரடியாக பதிக்கும். 2026ல் இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.55 லட்சம் வரை செல்லக்கூடும் என பல நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். தங்கம் எப்போதுமே பணவீக்கத்துக்கான பாதுகாப்பு சொந்தமாக இருந்ததால், நீண்ட கால முதலீட்டிற்கு இது தொடர்ந்து சிறந்த வாய்ப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.
======================