யூடியூப் முதன்மை
YouTube New Update 2025 in Tamil : இன்று ஸ்கிரினில் பொழுதுபோக்கு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும், இணையத்தில் கிடக்கிறார்கள். அதில் பல செயலிகள் வந்து மனிதனை ஆட்கொண்டாலும்,வணிகத்தை ஈட்டுவதிலும், பொழுதுபோக்கிலும் ஹீரோ மற்றும் வில்லன் என்றல் அது யூடியுப் தான்.
யூடியூப் அப்டேட் :
பொதுவாக செயலிகள் அனைத்திலும் அதை மெரூகேற்றும் விதமாகவும், பயனாளர்கள் தன்வசம் வைக்கும் விதமாகவும் தொடர்ந்து அப்டேட்டுகள் என புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, செயலியின் பக்கம் ஈர்ப்பர். அதன்படி இன்று தவிர்க்க முடியாத செயலியாக உருவெடுத்துள்ள யூடியூப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
வீடியோ தரம் அதிகரிப்பு
அதாவது, யூடியூப்பில் உள்ள பழைய லோ குவாலிட்டி (வீடியோ தரம் குறைந்த) வீடியோக்களை ஏஐ மூலமாக ஆட்டோமேட்டிக்காக உயர்தர (HD) வீடியோக்களாக மாற்றிக்கொள்ளும் வசதியை யூடியூப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது(YouTube AI HD Conversion New Update 2025). இந்த புதியவசதி மூலம், 1080p என்ற தரத்துக்குக் குறைவாக பதிவிடப்பட்டுள்ள பழைய வீடியோக்கள் மற்றும் இனிமேல் பதிவிடவுள்ள புதிய வீடியோக்கள் போன்றவற்றை ஏஐ மூலமாக தரம் உயர்த்த யூடியூப் முடிவு செய்துள்ளது.
பயனர்கள் சூப்பர் ரெசல்யூஷனை பயன்படுத்துங்கள்
இதில் 4K, HD மற்றும் அல்ட்ரா HD வரைக்கும் ஏஐ மூலமாக வீடியோக்களின் தரத்தை உயர்த்த யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. செட்டிங்ஸ் பகுதியில் உள்ள ‘சூப்பர் ரெசல்யூஷன்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஒப்புதல் தெரிவித்தால், யூடியூப்பே வீடியோக்களை தானாக தரம் உயர்த்திக் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பயனாளர்கள் மகிழ்ச்சி
யூடியூப்பில் பொழுதுபோக்கி, தகவல் அறிந்து கொள்வதை தாண்டி அதில் ஒரு கிரியேட்டராக பணம் ஈட்டுவது என்று பெரிய தொழில் பாதாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில், இன்று தனக்கென ஒரு யூடியூப் பக்கத்தை உருவாக்கி மக்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அதன்மூலம் பணம் ஈட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதிலும், இன்று யூடியூபர் என்று அந்தஸ்தால், மதிப்பும் மரியாதையும் உச்சம் தொட்டு இருக்கிறது என்றால் மிகையாகாது.
கிரியேட்டர்கள் வரவேற்பு
இந்நிலையில், யூடியூப் கிரியேட்டரகள் இனிமேல் செய்யப்போகும் வீடியோவும் சரி, இதுவரை தெளிவான கிளேரிட்டி இல்லாமல் பதிவேற்றிய வீடியோவும் என அனைத்தும் ஹெச்டியாக மாறப்போகிறது.
எனவே, தங்களது பக்கங்களின் வருகையும், பார்வையாளர்களும் அதிகப்படுவர் என யூடியூப் கிரயேட்டர்கள் மத்தியல் இது பெரும் வரவேற்பை பெற்றுளதை அடுத்து, இந்த அப்டேட்டை பயனாளர்கள் முதல் கிரியேட்டர்கள் வரை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.