ZOHO Careers Job Openings in Chennai 
வணிகம்

ZOHO Careers : ஐ.டி ஊழியர்களுக்கு ஜாக்பாட்- அழைக்கிறது ஜோஹோ!

ZOHO Careers Job Openings in Chennai : முன்னணி நிறுவனங்கள் வேலையில் இருந்து பணியாளர்களை நீக்கும் நிலையில், தமிழகத்தில் தலைமை நிறுவனத்தை கொண்ட ஜோஹோ வேலைவாய்ப்பு குறித்து அறிவித்துள்ளது.

Bala Murugan

உச்சத்தில் ஜோஹோ :

ZOHO Careers Job Openings in Chennai : சென்னை : முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி பட்டியலில் ஜோஹோ

தமிழ்நாட்டில் டிசிஎஸ், அக்சென்ச்சர், எச்சிஎல் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் தன்னை முன்நிறுத்தி இருப்பதுதான் ஜோஹோ. தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், சமீபகாலமாக அரட்டை, உலா உள்ளிட்ட செயலிகளை அறிமுகப்படுத்தி மத்திய அரசு வரை அனைவரையும் உபயோகப்படுத்த வைத்து, சாதனை படைத்து இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மெயில்-ஐடியை ஜோஹோவுக்கு மாற்றி அறிவித்தது, பெரும் பேசுபொருளாக ஆரம்பமாகி, கூடுதலாக அனைவரின் கவனமும் ஜோஹோவின் பக்கம் திரும்பியுள்ளது.

ஜோஹோவில் வேலைவாய்ப்பு

இந்நிலையில் ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்வோருக்கு டெவலப், டெஸ்ட் மற்றும் புதிய சாப்ட்வேர் புரோகிராமை இம்பிளிமென்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

தயாராக இருக்க வேண்டும்

அதேபோல் பிழைகள் இன்றி Code எழுத தெரிந்திருக்க வேண்டும். டிரபுள்சூட், டீபக் மற்றும் சாப்ட்வேர் புரோகிராமை மெயின்டெயினிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். புராடெக்ட் மேனேஜ்மென்ட் டீமுடன் சேர்ந்தும், பிற டெவலப்பர்ஸ், டிசைனர்ஸ் உள்ளிட்டவர்களுடனும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிச்சூழலுக்கு ஏற்ப விரைவாக பணியாற்றி புதிய டெக்னாலஜியை கற்று கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

சம்பளம் குறித்த அறிவிப்பு

பணிக்கான மாதச் சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ZOHO நிறுவனத்தில் வேலை : தமிழ்நாட்டில் பணி நியமனம்

உடனே விண்ணப்பிக்கலாம்

ஆனால், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள், பின்னர், விண்ணப்பம் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

=============