ZOHO Corporation's Arattai Messenger App Reach 10 Million Download 
வணிகம்

ஒரு கோடி பதிவிறக்கத்தில் அரட்டை-இனி அரட்டையின் அரட்டைகள் ஆரம்பம்!

ZOHO's Arattai App : ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி குறித்து தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒரு கோடி பதிவிறக்கங்களை பெற்று அரட்டை செயலி சாதனை படைத்துள்ளது.

Bala Murugan

ஜோஹோ பயணம் :

ZOHO's Arattai Messenger App Reach 10 Million Download : இந்தியாவின் முண்ணனி தொழில்நுட்ப நிறுவனங்களில், முதல் இடத்தை பிடித்து அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம். நெட்வொர்க் மேனேஜ்மென்ட், டேட்டா அனலைஸிஸ் என்று தொடங்கிய நிறுவனம், இன்று இந்தியா மட்டுமல்லாது உலகளவில் மென்பொருள் சாஃப்ட்வேர்களை வழங்கி, அசுர வளர்ச்சி அடைந்து பிரபலமடைந்துள்ளது.

அரட்டை பதிவிறக்கம் :

ஜோஹோவின் மாபெரும் வளர்ச்சியாக, இன்று அரட்டை செயலி பொதுமக்கள் மத்தியில் மாபெரும் இடத்தை பிடித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு. ஆஃப் ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, நாளுக்கு இரண்டு, மூன்று பதிவிறக்கம் என தொடங்கி ஆயிரம், லட்சத்தை தாண்டி இன்று ஒரு கோடி(Most Dowloaded App Arattai) பதிவிறக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

அதிபர் டிரம்ப் வரி விதிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பிரதிபலித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி சுதேசி இயக்கமான நம் ஊர் தயாரிப்புகளை மக்கள் உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்ட செயலிகளான வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் உள்ளிட்டவற்றை விடுத்து இன்று தமிழக, இந்திய மக்கள் அரட்டையில் குதித்துள்ளனர்.

மேலும் படிக்க : அரட்டையின் சிறப்பு அம்சங்கள்-தெரிஞ்சுகிட்டு உபயோகப்படுத்துங்க!

அரட்டையின் ஆக்கம்

ஒரு கோடி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள அரட்டையில், வாய்ஸ்கால், வீடியோகால், குரூப் மீட்டிங் என வாட்ஸ்அப்பை தாண்டிய அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதன் வேகமும் அதிகரித்து வருவதால், பயனர்களின் பதிவிறக்கமும் அதிகரித்துள்ளது. மேலும், பயனர்களின் டேட்டாஸ் 3வது நபர்களுக்கு காட்டப்படாது என ஜோஹோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஜோஹோ நிறுவனத்தின் இந்த அரட்டை செயலி சாதனை தொடர்ந்து, மேலும் பல செயலிகளாக இந்தியா மற்றும் உலகளவில் உலா வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.