The Paradise Movie Release Date
நானியின் "தி பாரடைஸ்"
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நானி "தி பாரடைஸ்" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார்.
'ஆயா ஷேர்' பாடல் ரிலீஸ்
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'ஆயா ஷேர்' கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இசையில் மிரட்டும் அனிருத்
இளம் தலைமுறையினரின் மனம் கவர்ந்த முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் வெளியான 'ஆயா ஷேர்' பாடல், வெளியான மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
யூடியூபில் 150 மில்லியன் பார்வை
குறிப்பாக, யூடியூப் தளத்தில் இப்பாடலின் தெலுங்குப் பதிப்பு மட்டும் தற்போதைய நிலவரப்படி 150 மில்லியன் அதாவது 15 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி, 1.6 மில்லியன் அதாவது 16 லட்சம் லைக்குகளையும் பெற்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ரீல்ஸ்
இப்பாடலின் அதிரடியான மியூசிக் மற்றும் துள்ளலான இசை காரணமாக, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் ரசிகர்கள் பலரும் இப்பாடலின் நடன அசைவுகளை மறுஉருவாக்கம் செய்து 'ரீல்ஸ்' வீடியோக்களாக குவித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் நானி மற்றும் அனிருத் நடனம்
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அனிருத்தின் பிரம்மாண்ட இசைக்கச்சேரியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நடிகர் நானி மேடையில் ஏறி இந்த 'ஆயா ஷேர்' பாடலுக்கு அனிருத்துடன் இணைந்து அதிரடியாக நடனமாடினார். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தி பாரடைஸ்" வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நானி - ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் அனிருத்தின் இசையோடு பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் "தி பாரடைஸ்" திரைப்படம், வருகிற ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக இப்பாடலின் இமாலய வெற்றி படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போது பல மடங்கு உயர்த்தியுள்ளது.
=====