surya,jyothika 20 years of love  source: jyotika's profile picture jyotika, actorsuriya
சினிமா

20 ஆண்டுகால திருமண வாழ்க்கை: சூர்யா - ஜோதிகாவின் கிறித்துவ முறைத் திருமணம் & சாதனையைப் படைத்த வீடியோ!

விஜய் - அஜித் சாதனையை முறியடித்த சூர்யா - ஜோதிகா: 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகளைக் கடந்த வீடியோ.

Kavitha prasanna

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரத் தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக, தற்போது மீண்டுமொரு முறை குறிப்பாக கிறித்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

20 ஆண்டுகால காதல் பயணம்

கடைசியாக 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தில் நடித்த சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். அத்திரைப்படம் செப்டம்பர் 8, 2006 அன்று வெளியானது. இதையடுத்து செப்டம்பர் 11, 2006 அன்று அத்திரைப்படம் வெளியான 3-வது நாளில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கிறித்துவ முறைப்படி மீண்டும் திருமணம்

திரையுலகிலும் சரி, பொது வாழ்விலும் சரி, பல தம்பதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் ஜோடியாக உள்ள இவர்கள் தற்போது, தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு வெளிநாட்டில் கிறித்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நெருக்கமான சுபநிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, சூர்யாவின் மகன், மகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இணையத்தில் சாதனை

திரையுலகினரின் திருமணம் நீண்ட காலம் நிலைக்காது என்ற பார்வையை உடைத்து, 20 ஆண்டுகளாக முன்மாதிரி ஜோடியாகத் திகழும் சூர்யா - ஜோதிகா தம்பதியை நடிகர் மாதவன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

'20 Years of Love & War'

இவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ‘20 Years of Love & War’ என்ற 'Collab' வீடியோ இணையத்தில் அதிக பார்வைகளைக் கடந்து சாதனையைப் படைத்துள்ளது.

4.8 கோடி பார்வை 3.7 மில்லியன் லைக்ஸ்

சூர்யா - ஜோதிகா திருமண வீடியோ வெளியான 13 மணி நேரத்திலேயே 48 மில்லியன் அதாவது 4.8 கோடி பார்வைகளையும் 3.7 மில்லியன் லைக்குகளையும் பெற்று முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய் - அஜித் வீடியோ உடன் ஒப்பீடு

சமீபத்தில் வெளியான முதல்வர் விஜய் - அஜித் லண்டன் சந்திப்பு 'Collab' வீடியோ 18 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளையும், 2 மில்லியன் லைக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத்தில் அதிக பார்வைகளைக் கடந்துள்ள சூர்யா - ஜோதிகாவின் இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

======