ரசிகர்கள் கொண்டாடிய குட் பேட் அக்லி
2025 Good Bad Ugly Blockbuster Movie : அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அஜித்தின் இரண்டு படங்கள் வெளிவந்தது. இதில் குட் பேட் அக்லி மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.
கொண்டாடப்பட்ட அஜித் படம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் அஜித் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக மிகப்பெரிய வசூலையும் இப்படம் ஈட்டியது.
ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளிய குட் பேட் அக்லி
இந்நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கம் போல இந்த வருடம் அதிகப்படியான வசூலித்த படங்கள் என்னவென்ற பட்டியில் வெளிவரதொடங்கியுள்ளது.
அந்த வரிசையில் தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படமாக குட் பேட் அக்லி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதன் பிறகு இரண்டாவது இடத்தில் ரஜினியின் கூலி திரைப்படம் இடம்பிடித்திருக்கின்றது.
வைரலாகும் குட் பேட் அக்லி கருத்து
2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே அதிக வசூல் செய்த படமாக அஜித்தின் குட் பேட் அக்லி இருப்பது அஜித் ரசிகர்களை கொண்டாடத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இந்த தகவல் இணையத்தில் அஜித் வைரலாகி வரும் நிலையில், இந்த வருடம் மட்டும் அஜித் க்ளாஸான விடாமுயற்சி மற்றும் மாஸான குட் பேட் அக்லி எனவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
விடாமுயற்சி திரைப்படம் பொதுவான ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஆதிக் மேக்கிங் ஸ்டைலை விரும்பிய அஜித்
ரசிகராகவும், இயக்குநராகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படமானது முழுவதும் ரசிகனாக இயக்கி மற்ற அஜித் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளார்.
ஒரு ரசிகராக அஜித்தை எப்படி திரையில் பார்க்க வேண்டும் என கடந்த பல வருடங்களாக நினைத்திருந்தார்களோ அது குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித் ரசிகர்களுக்கு நடந்து விட்டது.
மேலும் ஆதிக் ரவிச்சந்திரனின் ஒர்கிங் ஸ்டைலும் அவர் படமாக்கும் விதமும் அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டது என்று கிசுகிசுப்புகளும் பரவி வருகிறது.
AK64 குறித்து ஆதிக்ரவிச்சந்திரன்
அதன் காரணமாக தான் தன் அடுத்த படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பினையும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வழங்கியிருக்கிறார்.
ஆனால் அவர்கள் இணையப்போகும் AK64 திரைப்படம் குட் பேட் அக்லி படத்திலிருந்து மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கான ஒரு படமாக இருந்தது.
ஆனால் அடுத்ததாக அஜித் மற்றும் ஆதிக் இணையும் AK64 திரைப்படம் பொதுவான ரசிகர்களுக்கான ஒரு படமாக இருக்கும் என ஆதிக் கூறியிருந்தார்.
பத்மபூஷன் விருது, கார் ரேஸ் என்று அஜித்துக்கு கொண்டாட்டமாகிய இந்த ஆண்டு
இதைத்தொடர்ந்து AK64 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு டைட்டிலுடன் ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் ,பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிகின்றது.
இந்நிலையில் 2025 தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக முதலிடத்தில் குட் பேட் அக்லி இருக்க இரண்டாம் இடத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் உள்ளது. இருந்தாலும் உலகளவில் இந்த வருடம் அதிக வசூல் செய்த படமாக கூலி தான் உள்ளது.
இப்படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டதால் தமிழகத்தில் எதிர்பார்த்த வசூல் இல்லை, குழந்தைகள் மற்றும் குடும்பங்களால் கூலி திரைப்படத்தை திரையில் பார்க்க இயலவில்லை.
அதனால் தான் இப்படம் தமிழகத்தில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது என தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு அஜித்தாலும் அவரது ரசிகர்களாலும் மறக்கமுடியாத ஒரு ஆண்டாகவே அமைந்திருக்கின்றது.
அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ், பத்மபூஷன் விருது, கார் ரேஸில் வெற்றிகள் என அஜித்திற்கு இந்த வருடம் பொன்னான ஒரு வருடமாக அமைந்தது என்றால் மிகையாகாது