72nd National Film Awards Tamil Winners Amaran Maharaja Raayan Captain Miller ai
சினிமா

72வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு 9 விருதுகள் ! விக்ரம், கார்த்தி புறக்கணிப்பால் ரசிகர்கள் ஆதங்கம்!

அமரன், மகாராஜா, ராயன் வெற்றி பெற்ற வேளையில் விக்ரம், கார்த்திக்கு விருது கிடைக்காததால் ரசிகர்கள் ஆதங்கம்.

Kavitha prasanna

72nd National Film Awards Tamil Winners Amaran Maharaja Raayan Captain Miller

2024-ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 9 தேசிய விருதுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளன.

இந்திய திரையுலகின் உயரிய விருதான தேசிய விருதுப் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்ப் படங்கள் மற்றும் வெற்றியாளர்களின் முழு விவரம்:

1. அமரன் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்

  • சிறந்த படத்தொகுப்பு: ஆர். கலைவாணன்

  • சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி

  • சிறந்த பின்னணி இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

2. மகாராஜா திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள்

  • சிறந்த சண்டைப் பயிற்சி: அனல் அரசு

  • சிறந்த துணை நடிகை: சச்சனா நமிதாஸ்

3. கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள்

  • சிறந்த நடிகர் (சிறப்பு பிரிவு): தனுஷ்

  • சிறந்த சமூக அக்கறை உள்ள திரைப்படம்

4. மெய்யழகன் திரைப்படத்திற்கு 1 தேசிய விருது

  • சிறந்த ஒலிப்பதிவு / ஒளிக்கலவை: சுரேஷ் ஜி

5. ராயன் திரைப்படத்திற்கு 1 தேசிய விருது

  • சிறந்த தமிழ்த் திரைப்படம்

தமிழ் ஆவணப் படம் (ப்ளூ)

  • சிறந்த சவுண்ட் டிசைனர்: டிஎஸ் ஹரிஹர சுதன்

விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன் புறக்கணிப்பு – ரசிகர்கள் வருத்தம்

ஒருபுறம் தமிழ் சினிமா 9 விருதுகளை அள்ளியிருந்தாலும், 2024-இல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'லப்பர் பந்து', 'கொட்டுக்காளி', 'வாழை', 'தங்கலான்' ஆகிய திரைப்படங்களுக்கு எந்த விருதுகளும் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துகளை, ஆதங்கத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, 'தங்கலான்' திரைப்படத்தில் மிகவும் கடினமான நிலப்பரப்புக் காட்சிகளில் நடித்த விக்ரமிற்கும், 'மெய்யழகன்' படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்திய கார்த்திக்கும், அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்த சிவகார்த்தியனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆதங்கம்

தொடர்ந்து அமரன் திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி, அமரன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், நடிகை சாய் பல்லவிக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், தற்போது ஏமாற்றமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

=====