A massive ₹330 crore haul: Suriya's 'Karuppu' on OTT – "You changed my life, Sir" – RJ Balaji moved! source: social media
சினிமா

ரூ.330 கோடி வசூல் : ஓடிடியில் சூர்யாவின் 'கருப்பு' : என் வாழ்க்கையையே மாத்திட்டீங்க சார்" : ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி!

சூர்யா நடிப்பில் ரூ. 330 கோடி வசூல் சாதனை படைத்த 'கருப்பு' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார்.

Kavitha prasanna

A massive ₹330 crore haul: Suriya's 'Karuppu' on OTT – "You changed my life, Sir" – RJ Balaji moved!

ஓடிடியில் வெளியான சூர்யாவின் ’கருப்பு’

கோலிவுட்டில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான சூர்யாவின் 'கருப்பு', திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்ததைத் தொடர்ந்து தற்போது முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி

இதனிடையே, இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக நடிகர் சூர்யாவிற்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்து நெகிழ்ந்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜியின் எமோஷனல் பதிவு

'கருப்பு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை முன்னிட்டு ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், சூர்யாவுடன் இருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

என் வாழ்க்கையையே மாத்திட்டீங்க சார்

அதில்"முதல் நாளில் இருந்தே என் மீது நீங்கள் வைத்த அந்த ஒரே ஒரு நம்பிக்கைதான், என் கனவை நிஜமாக்கியுள்ளது. நீங்கள் கொடுத்த ஆதரவு, என் வாழ்க்கையின் புதிய பயணத்திற்கான தொடக்கமாக அமைந்தது.

சூர்யா சார் இல்லாமல் இந்த மெகா பிளாக்பஸ்டர் சாத்தியமே இல்லை. என் வாழ்க்கையை நீங்கள் மொத்தமாக மாற்றிவிட்டீர்கள். உங்கள் மீது என்றும் மாறாத அன்பும், மரியாதையும் உண்டு." என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் 'கருப்பு' நிகழ்த்திய சாதனை

கடந்த மே 15 அன்று தியேட்டர்களில் வெளியான இத்திரைப்படம், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சூர்யாவின் திரைப் பயணத்திலேயே மிக அதிக வசூலாக, உலக அளவில் ரூ. 330 கோடிக்கும் மேல் இப்படம் ஈட்டியுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 175 கோடிக்கும் அதிகமான வசூலையும், 1 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியும் புதிய சாதனை படைத்துள்ளது.

அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக 'பேபி கண்ணன்' என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ள இத்திரைப்படம், இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

தமிழின் 'கருப்பு' பதிப்போடு, இதன் தெலுங்கு டப்பிங் பதிப்பான 'வீரபத்ருடு' திரைப்படமும் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

======