A milestone achievement of over 100 million views: Singer Shreya Ghoshal's song 'Kalyani' is a massive success! google
சினிமா

10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை: பாடகி ஷ்ரேயா கோஷலின் 'கல்யாணி' பாடல் இமாலய வெற்றி!

இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் சுயாதீன ஆல்பம் பாடல்கள் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகின்றன.

Kavitha prasanna

A milestone achievement of over 100 million views: Singer Shreya Ghoshal's song 'Kalyani' is a massive success!

ஷ்ரேயா கோஷல் பாடிய 'கல்யாணி' ஆல்பம் பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

திரையிசைக்கு இணையான ஆல்பம் பாடல்களின் சாதனை

திரைப்படப் பாடல்களுக்கு இணையான ஆல்பம் பாடல்களும் இப்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் சுயாதீன ஆல்பம் பாடல்கள் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகின்றன.

இன்ஸ்டா ரீல்ஸ்களில் வைரலான 'கல்யாணி'

அந்த வகையில் கடந்த 2025-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கல்யாணி' ஆல்பம் பாடல் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் ஹிட் அடித்ததுள்ளது. அர்ஜன், கேடிஸ் மற்றும் பிப்டி4 ஆகியோர் இணைந்து இசையமைத்துப் பாடிய இப்பாடலை சுஹாஸ் மொய்தீன் எழுதியிருந்தார்.

சிரிக்கள்ளே பெண்ணே கல்யாணி

குறிப்பாக, "சிரிக்கள்ளே பெண்ணே கல்யாணி.... நிண்ட சிரி கண்டப்போள்" என்ற வரிகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் இந்திய அளவில் வைரலானது.

ஷ்ரேயா கோஷல் குரலில் புதிய வடிவம்

இப்பாடலுக்குக் கிடைத்த பேராதரவைத் தொடர்ந்து, நடிகை சானியா அய்யப்பன் நடனமாட, பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் குரலில் இதன் புதிய வீடியோ வடிவம் கடந்த மாதம் யூடியூபில் வெளியாகி இருந்தது.

100 மில்லியன் பார்வைகள்

வெளியான சில நாட்களிலேயே இப் புதிய பதிப்பு 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பாடலின் முதல் பதிப்பை விட ஷ்ரேயா கோஷல் குரலில் அமைந்துள்ள இந்தப் பதிப்பு இன்னும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து, இப்பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க : தொடர் வெற்றிகளால் திரையுலகில் புதிய சாதனை படைத்த நடிகை மமிதா பைஜு!

======