AA22xA6 Movie Update Anushka Sharma makes a comeback after 8 years Joins with Allu Arjun Atlee Combo source : google
சினிமா

அட்லி - அல்லு அர்ஜுன் இணையும் மெகா பட்ஜெட் படம் : 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா சர்மா!

AA22xA6 Movie Update in Tamil : AA22xA6, இத்திரைப்படத்தில் தாத்தா, தந்தை மற்றும் 2 மகன்கள் என மொத்தம் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக கூறப்படுகிறது.

S Kavitha

அட்லி - அல்லு அர்ஜூன்

AA22xA6 Movie Update in Tamil : தென்னிந்திய சினிமாவின் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுன் மற்றும் பாலிவுட்டில் 'ஜவான்' மூலம் அதிரடி காட்டிய இயக்குநர் அட்லி ஆகியோரின் கூட்டணி குறித்த செய்திகள் ஏற்கனவே இணையத்தைக் கலக்கி வருகின்றன.

இப்போது, அந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கும் வகையில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது!

ரூ. 600 கோடி பிரம்மாண்ட பட்ஜெட் :

சுமார் ரூ. 600 கோடி(aa22xa6 movie budget) பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் இந்திய சினிமாவின் மிக முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 கதாப்பாத்திரங்களில் அல்லு அர்ஜுன்

இத்திரைப்படத்தில் தாத்தா, தந்தை மற்றும் 2 மகன்கள் என மொத்தம் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். மேலும், மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

அனுஷ்கா சர்மாவின் மாஸ் என்ட்ரி

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா(Anushka Sharma in AA22xA6 Movie) இப்படத்தில் ஒரு முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

2018-ல் வெளியான 'ஜீரோ' படத்திற்குப் பிறகு அனுஷ்கா ஷர்மா சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

8 ஆண்டுகளுக்குப் பின்

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்திருந்த அனுஷ்கா சர்மா, தற்போது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். அனுஷ்கா ஷர்மாவின் வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் குழு

இப்படத்திற்கு தற்போதைய ட்ரெண்டிங் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அட்லியின் மேக்கிங் மற்றும் சாய் அபயங்கரின் இசை இணையப்போவது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

டீசர் அப்டேட்

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாக இருக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசர் வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த டீசரைப் பார்த்த சில திரைப்பிரபலங்கள் ஏற்கனவே வியந்து பாராட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.