Aaromaley Movie Update Actor Simbu Made Correction in Aaromale Film Director Sarang Thiagu Open Talk Google
சினிமா

ஆரோமலே படத்தில் சிம்பு சொன்ன மாற்றம் - இயக்குநர் ஓபன் டாக்!

Aaromaley Movie Update in Tamil : ஆரோமலே படத்தில் சிம்பு சில மாற்றங்கள் கூறியதாக படத்தின் இயக்குநர் சாரங் தியாகு வெளிப்படையாக ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

Bala Murugan

நடிகராக கிஷன் தாஸ்

Aaromaley Movie Update in Tamil : பிரபல யூடியூபரான கிஷன் தாஸ் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே 'முதலும் நீ முடிவும் நீ' என்ற படத்தில் ஹீரோவாக தன்னை அறிமுகம் படுத்தி கொண்டதை அடுத்து, தற்போது சாரங் தியாகு இயக்கத்தில் ஆரோமலே(Aaromale) படத்தில் நடிக்கிறார்.

ஆரோமலே படக்குழு

இப்படத்தில் பிரபல யூடியூபர் ஆன ஹர்ஷத் கானும் கிஷன் தாஸ், மற்றும் புதுமுக நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது, சித்து குமார் இதற்கு இசையமைக்கிறார். கௌதம் ராஜேந்திரன் இப்படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார்.

படத்தின் புரோமோ, டிலைர் வைரல்

இந்நிலையில், இப்படத்தின் புரோமோ 5 மாதங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. நவம்பர் 7 ஆம் தேதி(Aaromale Movie Release Date) வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இதுவரை 6. 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு நடிகர் சிம்பு சில விசயங்கள கூறியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

இயக்குநர் சாரங் தியாகு ஓபன் டாக்

அதன்படி, ரொமான்டிக் படம்தான். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து ஒரு வார்த்தையை எடுத்து தலைப்பாக வைத்துள்ளேன். ஒரு பள்ளி மாணவன் இளைஞனாவது வரை அவன் வாழ்வில் நடக்கும் காதல் சம்பவம்தான் கதை என்று கூறியுள்ளார்.

படத்தில் நடிப்பதற்கு அனைவரையும் ஆடிஷன் நடத்தித் தேர்வு செய்தோம். ஆனால், ஹீரோவாக கிஷன் தாஸை மனதில் வைத்தே கதையை எழுதினேன். படத்தில் அவர், சினிமா வசனங்களைப் பேசி காதலிக்க முயற்சிப்பார். நாயகி ஷிவாத்மிகாவுக்கு பொறுப்பான ஒருவரைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம்.

இவர்கள் இருவருக்கும் வரும் காதலும் அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளும்தான் கதை. இன்றைய கால கட்ட இளைஞர்களின் காதல் கதையாக இது இருக்கும். படம் முடிந்ததும் நடிகர் சிம்பு பார்த்தார். அவர் சில மாற்றங்களைச் சொல்லி, அதைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டு அவர் சொன்ன மாற்றங்களை மீண்டும் ஷூட் செய்து சேர்த்தோம். கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

படம் குறித்த எதிர்பார்ப்பு

படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் படத்திற்கு போட்டியாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கும் வகையில், இயக்குநர் ஓபன் டாக்கில் சிலவற்றை உடைத்துள்ளார், இதனால் இன்றைய தலைமுறைக்கு சிறப்பான ஒரு அறுசுவையாக இப்படம் இருக்கும் என்று சினிமா பிரியர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.