அஜித்குமார் சினிமா - ரேஸிங்
Indian Cinema Logo in Actor Ajith Kumar Car Racing Suit : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும், கமெர்ஷியல் வசூலின் கதாநயர்களில் ஒருவராகவும் வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் சினிமாவை தாண்டி, ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர் என அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இவர் தனெக்கென அஜித்குமார் கார் ரேஸிங்(Ajith Car Racing) என்று சொந்த பந்தய நிறுவனத்தையும் வைத்து நடத்தி வருகிறார்.
ரேஸிங் சாம்பியன் அஜித்குமார் :
தனது நிறுவனமான அஜித் குமார் ரேஸிங்கில், இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என அனைவரையும் உள்ளடக்கி தனது அணியையும், நிறுவனத்தையும் மிகச்சிறப்பாகவும், துள்ளியமாகவும் நடத்தி கொண்டு இருக்கிறார். தொடர்ந்து 24 மணி நேர ரேஸிங் மற்றும் 12 மணி நேர ரேஸிங் என்று தனது அணியுடன் களமிறங்கும் அஜித் பல்வேறு நேரங்களில், திடுக்கிடும் ரேஸிங் அப்டேட் கொடுத்தாலும். தொடர்ந்து துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ரேஸிங் போட்டியில்(Ajith Kumar Car Racing Winner) கலந்து கொண்டு ஒரு இரண்டாவது இடத்தையும், 2 முறை 3வது இடத்தையும், பதக்கங்களையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவரின் தொடர் ரேஸிங் அப்டேட்டை அவரது ரசிகர்கள் சினிமாவை தாண்டி வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
சினிமா லோகோ இணைப்பு :
தனது சொந்த வாழ்க்கை மற்றும் ரேஸிங், சினிமா என பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வரும் நடிகர் அஜித்குமார். இப்பொழுது தனது ரேஸிங்கில் புது அப்டேட்டாக தனது ரேஸிங் உடையிலும்(Ajith Kumar Car Racing Suit), தனது பந்தைய காரிலும் இந்திய சினிமாவை பெருமை படுத்தும் வகையில் சின்ஸ் 1913 எனவும் இந்திய சினிமா மற்றும் அதன் 20 மொழிகள் என லோகோவுடன் அச்சிட்டு அசத்தியுள்ளார். அவர் தனது ரேஸிங்கில் சினிமா குறித்த அப்டேட் கொடுப்பதாக முன்கூட்டியே கூறி இருந்த நிலையில், தற்போது இந்த லோகோ அப்டேட் கொடுத்து அசத்தியுள்ளார்.
மேலும் படிக்க : ஸ்பெயினில் பட்டைய கிளப்பும் அஜித் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இதனை அவரின் மேனெஜர் சுரேஷ் சந்திரா(Suresh Chandra) தனது எக்ஸ் பக்கத்தில் ரேஸிங் கார் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். சுரேஷ் சந்திராவின் இத்தகைய பதிவிற்கு அஜித்குமார் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து, வீடியோவை சேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.