ஜனநாயகன் படம் எதிர்பார்ப்பு
Jana Nayagan Audio Launch Date in Tamil : எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம், நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படும் நிலையில். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, விஜய் முழுவதும் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இனி அவர் படத்தில் நடிக்கமாட்டார் இதுவே கடைசி படம் என்பதால், விஜய் ரசிகர்களை தாண்டி இப்படத்தின் எதிர்பார்ப்பு திரைரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கிளப்பியுள்ளது.
பிரம்மாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழா
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை) பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக(Jana Nayagan Audio Launch Date in Tamil) படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் டிரெய்லர் 2026 ஜனவரி 1-ம் தேதி வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவுக்காக தயாராகி வருகின்றனர். அதுமட்டுமில்லை விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் மலேசியா பறந்துள்ளனர். இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.
அதுமட்டுமில்லை மலேசியாவில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவிற்கு(Jana Nayagan Audio Launch Venue in Tamil) அந்த நாட்டு அரசு சில கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, விழாவில் எந்தவிதமான அரசியல் சார்ந்த நிகழ்வுகளும், கட்சி தொடர்பான உரைகளும் இடம்பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், ஆதலால் இசை வெளியீட்டு விழா முழுவதும் திரைவிஜயை ரசிகராக சினிமா பாணியில் ரசிக்க முடியும் என்ற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
இடம்: இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் இருக்கும் புக்கிட் ஜலீல் தேசிய அரங்கத்தில் நடைபெறுகிறது.
நேரம்; மலேசியா நேரப்படி மாலை 6. மணி இந்திய நேரப்படி இது சுமார் மாலை 3:30 மணி(Jana Nayagan Audio Launch Time in Tamil) நிகழ்ச்சி தொடங்குகிறது.
எங்கு பார்க்கலாம்? இந்த நிகழ்ச்சியில் லைவ் டெலிகாஸ்ட்டுக்கு அனுமதி இல்லை. எனவே முழு நிகழ்ச்சியையும் சின்னத்திரையில் தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் ஆன பிறகே பார்க்க முடியும். அதே நேரம் சமூகவலைத்தளங்களில் ஷோவின் ஹைலைட்ஸ் வீடியோக்கள் வெளியாகலாம். நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் கட்டாயம் விஜய்யின் பேச்சை சமூகவலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட அதிக வாய்ப்புள்ளது.
2000 முதல் 1 லட்சம் வரை டிக்கெட் விலை
டிக்கெட்: இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி டிக்கெட் முழுமையாக விற்று தீர்ந்து விட்டன. டிக்கெட் இல்லாதவர்கள் அரங்கிற்குள் நுழைய அனுமதி இல்லை. பிளாட்டினம், கோல்டு என்ற பிரிவில் டிக்கெட் விலை நிர்ணியம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் விலை ரூ. 2000 முதல் தொடங்கி(Jana Nayagan Audio Launch Ticket Price in Tamil) விஜபி பாஸ் டிக்கெட் ரூ. 1 லட்சம் விலையில் விற்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.