கவின் பின்னணி :
Actor Kavin Nayanthara New Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வருபவர், நடிகர் கவின். இவர் விஜய் டி.வியில் புகழ்பெற்ற 'கனா காணும் காலங்கள்' சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். இதைத்தொடர்ந்து, 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார்.
பிக்பாஸ் கவின் :
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் தனி ரசிகர் கூட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனில் கவின்(Bigg Boss Kavin) பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில், பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான 'லிஃப்ட்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.லிஃப்.ட்டில் இருந்து தொடர்ந்த சினிமா ஜாக்பாட் கவினை 'ஸ்டார்', 'கிஷ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்', உள்ளிட்ட பல படங்களில் நடிக்க வைத்து, இன்று நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் ஒருவராக திகழ்கிறார்.
கவினின் அடுத்த அப்டேட் :
இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட்(Kavin Nayanthara Movie Update) இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டாவிற்கு திருமணமா? புகைப்படம் வைரல்!
லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் கவினும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இருப்பதால், இதன் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்பொழுது நயன்தாரா, கவின் இருவரும் வானத்தை பார்த்தபடி படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படத்தை, ரசிகர்கள் ஷேர் செய்து அப்டேட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.