Soori Hero Box Office Record source: soorimuthuchamy
சினிமா

'மண்டாடி' திரைப்படம் ரூ.100 கோடி வசூல் : நகைச்சுவை நடிகர் To கதாநாயகன் பயணத்தில் புதிய சாதனை படைத்த சூரி !

Soori Hero Box Office Record: மண்டாடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற வெற்றி விழா கோலாகலமாக நடைபெற்றது.

Kavitha prasanna

Actor Soori's Mandaadi Success: Rs 100 Crore Box Office Collection

மண்டாடி திரைப்படமும் வெற்றி விழாவும்

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' திரைப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், வெற்றி விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு.

மண்டாடி திரைப்படமும் வெற்றி விழாவும்

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற வெற்றி விழா கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் வெற்றிமாறனின் வாழ்த்து

வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "ஒரு திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது மக்களுடைய வரவேற்பே முக்கியமானது.

மக்கள் கொண்டாடும்போது நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இவ்வளவு காலம் போராடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இனி எல்லாவற்றிலும் நிதானமாக சென்றால் சிறப்பாக இருக்கும்" என்று வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் குறித்து நெகிழ்ச்சி

தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், "விடுதலை 1 கதையைச் சொன்னபோது செலவு அதிகமாகும் என்று தயங்கினேன். ஆனால் எல்ரெட் குமார் பரவாயில்லை என தைரியமாகக் கூறினார்.

சினிமா மீது மிகுந்த காதல் கொண்ட அவர், எப்போதும் தன்னை ஒரு உதவி இயக்குநராகவே நினைத்துக் கொண்டு செயல்படக்கூடியவர்" என நினைவுகூர்ந்தார்.

சூரிபுதிய வசூல் சாதனை

நகைச்சுவை நடிகராகப் பயணத்தைத் தொடங்கி 'விடுதலை', 'கொட்டுக்காளி', 'கருடன்', 'மாமன்' என வித்தியாசமான கதைகளில் நடித்து கதாநாயகனாக முத்திரை பதித்த சூரி, 'மண்டாடி' படம் மூலம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய சினிமாவில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகன் ஆனவர்களில் அதிக வசூல் குவித்த நடிகர் என்ற பெருமையையும் சூரி பெற்றுள்ளார்.

மக்களின் நாயகனாக உருவெடுத்த சூரி

சூரியைப் பார்க்கும்போது அவரது உழைப்பும் பயணமும் கண்கூடாகத் தெரிகிறது என்று குறிப்பிட்ட வெற்றிமாறன், மக்கள் சூரியைத் தங்களில் ஒருவராகவும், அவரது வெற்றியைத் தங்கள் வெற்றியாகவும் கொண்டாடுவதாகக் கூறி வாழ்த்தினார்.

==========