Actor Suriya Hikes Salary To 100 Crores After Karuppu Blockbuster Hit google
சினிமா

சூர்யாவின் 'கருப்பு' இமாலய வெற்றி : சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தினாரா சூர்யா?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' படம் ரூ.300 கோடி வசூல் செய்ததைத் தொடர்ந்து, சூர்யா தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Kavitha prasanna

Actor Suriya Hikes Salary To 100 Crores After Karuppu Blockbuster Hit

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

’ கருப்பு ‘ ரூ.300 கோடி வசூல்

பல தடைகளையும் கோலிவுட் வட்டாரத்தின் எதிர்பார்ப்புகளையும் கடந்து, கடந்த மே மாதம் வெளியான இத்திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி, சூர்யா,த்ரிஷா கூட்டணி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் சூர்யா 'கருப்பசாமி' என்ற கதாபாத்திரத்திலும், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் வழக்கறிஞர்களாகவும் நடித்திருந்தனர்.

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சூர்யா ஆகிய இருவரின் திரைப்பயணத்திலேயே மிக அதிக வசூல் செய்த திரைப்படமாக 'கருப்பு' மாறியுள்ளது.

படக்குழுவினருக்கு கார் பரிசு வழங்கிய சூர்யா

'கருப்பு' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், எடிட்டர் கலைவாணன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு ஆகிய நால்வருக்கும் புதிய கார்களைப் பரிசாக வழங்கி சூர்யா தனது மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளார்.

ரூ.100 கோடி சம்பளம்?

'கருப்பு' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது அடுத்த திரைப்படமான 'சூர்யா 49' படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்க முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல்?

இந்த புதிய சம்பள விவரம் குறித்து சூர்யா தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை என்றாலும், சூர்யாவின் தற்போதைய மார்க்கெட் மதிப்பிற்கு ரூ.100 கோடி தாராளமாக கொடுக்கலாம் என்றும் அவரது அன்பான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆகஸ்டில் ரிலீஸாகும் 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்'

மே மாத வெளியான கருப்பு திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்காகக் ஆவலோடு காத்திருக்கின்றனர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.

சூர்யாவின் அடுத்தடுத்த மெகா புராஜெக்ட்

சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 47' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48

இப்படத்தை முடித்த பிறகு, 'ஜெய் பீம்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளார். தற்போதைக்கு 'சூர்யா 48' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இத்திரைப்படத்தைக் கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த புகழ்பெற்ற 'ஹொம்பாலே பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

=====