ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து?
Jana Nayagan OTT Rights Cancelled : ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று பெறுவதில் தொடர்ந்து இழுபறி ஈடித்துவரும் நிலையில், பிரபல ஓடிடி நிறுவனம் ஜனநாயகன் படத்திற்கான ஓடிடி உரிமையை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் To தவெக தலைவர் விஜய்
நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறார். விஜயின் கடைசி படமான ’ஜன நாயகன்’ பொங்கல் தினத்தன்று வெளியாகும் என நினைத்த ரசிகர்களுக்கு இப்போது வரை ஏமாற்றம் மட்டுமே உள்ளது.
ஜனநாயகன் சிக்கல்
தணிக்கை சான்று பெறுவதில், சிக்கல், வழக்கு , தீர்ப்பு என ஜனநாயகன் ரிலீஸ் தேதி சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
தணிக்கை சான்று பெறுவதில் நீடிக்கும் சிக்கல்
விஜயின் கடைசி படமான ஜனநாயகன், சென்சார் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் சூழலில் கடந்த 6ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை உறுப்பினர்களில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மார்ச் 17 ம் தேதிக்கு மீண்டும் மறு ஆய்வை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
ஓடிடி புதிய சிக்கல்
இந்நிலையில் தற்போது விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 120 கோடிக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது.
உரிமம் ரத்தா?
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று பெறுவதில் தொடர்ந்து இழுபறி ஈடித்துவரும் நிலையில், ஓடிடி நிறுவனம், ரிலீஸ் தேதியைக் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தை நெருங்கியதாகவும், தற்போது ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையையே ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தயாரிப்பு நிறுவனத்திற்கு இழப்பு?
ஓடிடி உரிமையை ரத்து செய்ததன் மூலம் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனத்திற்கு ரூ.120 இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
விஜய்க்கு தொடர் பின்னடைவு
நடிகராக இருந்தவரை பிரச்னைகளை சந்திக்காத விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல், சிபிஐ விசாரணை, சங்கீதா விவாகரத்து வழக்கு , நடிகை திரிஷாவுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு சர்ச்சை என விஜய் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இப்போது புதிதாக ஜனநாயகன் ஓடிடி உரிமையும் ரத்தானதாக கூறப்படுகிறது.
விஜய் எதிர்கொள்ளவிருக்கும் வழக்குகள்
சட்டமன்ற தேர்தல், விவாகரத்து வழக்கு, கரூர் நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் தணிக்கை சான்று மறு ஆய்வு என வரும் மாதங்களில் விஜய் இவை அனைத்தையும் எதிர்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.