Actor Vishnu Vishal Movie Aaryan Box Office Collection Day 1 விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்
சினிமா

Aaryan Collection: விஷ்ணு விஷாலின் ஆர்யன்- வசூல் அப்டேட் வெளியீடு!

Aaryan Box Office Collection Day 1 : விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள ஆர்யன் படம் குறித்த முதல் நாள் வசூல் அப்டேட் வெளிவந்துள்ளது.

Bala Murugan

விஷ்ணுவிஷால் படங்கள்

Aaryan Box Office Collection Day 1 : வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து வரும் நிலையில், இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.

ஆனால், வணிக ரீதியாக பெரும் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் சிரமத்தில் இருந்த இவருக்கு, ராட்சசன் என்னும் சைக்கோ கிரைம் த்ரில்லர் படம் வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், தொடர்ந்து கிரைம் த்ரில்லிரில் நடித்து வரும் இவருக்கு, கிரைம், த்ரில்லருக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே கூடியுள்ளது என்றால் மிகையாகது.

ஆர்யன் படக்குழு விமர்சனம்

இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிப்பிலும், தயாரிப்பிலும் நேற்று ஆர்யன் என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் பிரவீன் கே. இயக்க, செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஜிப்ரான் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படம் சற்று மாறுபட்ட கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ளது. தற்போது வரை இப்படத்திற்கு ஒரு நடுத்தர வரவேற்பு கிடைத்து வருகிறது.

படத்தின் வசூல்

இந்த நிலையில், இப்படம் குறித்த முதல் நாள் வசூல் அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி உலகளவில் வெளியாகி ரூ. 1.4 கோடி வசூல்(Aaryan Box Office Collection Day 1) செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வணிக வசூல் எப்படி இருக்கும் என்பதை தாண்டி, இப்படத்திற்கு என விஷ்ணு விஷால் ரசிகர் பட்டாளம் மேலும் உயருமா என்றும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.