நடிகர் யாஷ் திரைப்பயணம்
Yash Toxic Movie Release Date : கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர்,தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் உலகளவில் யாஷிற்கு ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்ததை தொடர்ந்து, மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வெற்றி பெற்றது. இதைத்தொடர்நது உலகளவில் புகழ் பெற்றவராக வலம் வந்த கே.ஐி.எஃப் யாஷ், அவரது அடுத்த படமாக "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
டாக்சிக் வெளியீட்டு தேதி
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ்(KVN Productions) தயாரிக்கும் நிலையில், இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும்(Toxic Release Date in Tamil) என படக்குழு முன்கூட்டி அறிவித்திருந்தது. இந்நிலையில், டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல் பரவி வந்ததை அடுத்து, ஆனால் திட்டமிட்டபடி டாக்ஸிக் படம் மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : வசூலில் உச்சம் தொட்ட காந்தாரா-தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை!
ரசிகர்கள் கொண்டாட்டம்
படம் வெளியீட்டு தேதி குறித்து தாமதம் என்று பரவி வரும் வதந்திக்கு தற்போது தயாரிப்பு நிறுவுனம் முற்றுப்புள்ளி வைத்து பதிலடி கொடுத்துள்ளது, இது குறித்து தயாரிப்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவினை யாஷ் ரசிகர்கள் ஷேர் செய்தும், கமென்ட்ஸ் பதிவிட்டும் கொண்டாடி வருகின்றனர்.