Actress Abhirami Venkatachalam Instagram Post Viral News in Tamil 
சினிமா

Abhirami Insta: கட்சி தொடங்கினாரா பிரபல நடிகை? வைரலாகும் போஸ்டர்!

Actress Abhirami Venkatachalam Instagram Post : நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாபெரும் ஒரு அசத்தல் அப்டேட் ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Bala Murugan

Actress Abhirami Venkatachalam Instagram Post : அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடத்திலும், கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். பொதுவாக திரைநடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் தங்களது குறித்த அப்டேட்டுகளை கொடுத்த வண்ணம் இருப்பர். அதன்படி நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாபெரும் ஒரு அசத்தல் அப்டேட் ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை(Nerkonda Paarvai) திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்த அவர், கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து அந்த பேராசிரியருக்கு ஆதரவாக அபிராமி பேசியது மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க : அகில இந்திய விருதுகள் : பட்டியலில் முக்கிய திரைப்பிரபலங்கள்..!

அந்த போஸ்டரில் திராவிட வெற்றி கழகம்(DVK Poster) என்ற கட்சியை அபிராமி தொடங்கியது போலவும் பொதுமக்கள் அவரை புகைப்படம் எடுப்பது போலவும் அமைக்கபட்டு திராவிட வெற்றிக் கழகம்(Dravida Vetri Kazhagam) என்ற ஆங்கில சொற்களில் வெளியிட்டுள்ளார்.

இவரின் தொடர் அப்டேட்டுகளுக்கு அசந்து போகும் அவரது ரசிகர்கள், அடடடடா! இதல்லவா அப்டேட் என்று அசந்து போய், அபிராமி புதிய கட்சியை(Abhirani Venkatachalam DVK Poster) தொடங்கினாரா? இல்லை புதிய படத்தின் போஸ்டரா என்று குழப்படமைந்துள்ளனர். மேலும், இவரின் இந்த போஸ்டருக்கு தங்களது காரசார கருத்துகளை சமூக வலைதளங்களில் எழுப்பியும், அவரின் போஸ்டரையும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.