Actress Samantha Ruth Prabhu marries director Raj Nidimoru With Linga Bhairavi Vivaha Rituals At Isha Yoga Centre Coimbatore in Tamil Nadu News google
சினிமா

சமந்தாவுக்கு ஈஷாவில் முடிந்த திருமணம் : இவர் தான் மாப்பிள்ளை!

Samantha Ruth Prabhu Raj Nidimoru Marriage at Isha : ஈஷா லிங்க பைரவியில் ‘பூதசுத்தி விவாஹா’முறையில் நடைபெற்ற சமந்தா பிரபு ராஜ் நிடிமொருவின் திருமணம், வாழ்த்து தெரிவிக்கும் சமந்தா ரசிகர்கள்.

Baala Murugan

சமந்தா திருமணம்

Samantha Ruth Prabhu Raj Nidimoru Marriage at Isha : நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று (01/12/2025) காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது.

இந்தத் தனிப்பட்ட திருமண வைபவத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

பூதசுத்தி விவாஹா முறையில் முடிந்த திருமணம்

லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது.

இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது.

சமந்தாவிற்கு ஈஷா அறக்கட்டளை வாழ்த்து

ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத்(Samantha Ruth Prabhu Raj Nidimoru Marriage) தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும், பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வேண்டும் என்று ஈஷா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

லிங்கபைரவி தேவி முன் திருமணம்

ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும். லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்குகளுக்கு ஒரு துடிப்பான இருப்பிடமாகத் திகழ்கிறது.

இங்கு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள்(Linga Bhairavi Vivaha Rituals in Tamil) நடைபெறுகின்றன.

ரசிகர்கள் வாழ்த்து

அப்படி, இருக்கையில் சமந்தா சில நாட்களுக்கு முன்பே ஃபர்சி, ஃபேமிலி மேன் 2 ஆகிய வெப் தொடரின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் சேர்ந்து உள்ளவாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதற்கு பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் சமூக வலைதளத்தில் வட்டமடித்து வந்த நிலையில், அதற்கு பதிலளிக்காத அவர், தற்போது இந்த திடீர் திருமணத்துடன் தனது கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரின் இந்த திருமண முடிவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.