Actress Trisha Krishnan Stepping Away from Cinema? What Is the Actual Situation? Here is Full Details in Tamil source: google
சினிமா

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நடிகை த்ரிஷா? உண்மை நிலவரம் என்ன?

Actress Trisha Krishnan Quitting Cinema? : த்ரிஷா கடந்த மூன்று மாதங்களாக எந்தவொரு புதிய திரைப்படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

S Kavitha

தென்னிந்தியத் திரையுலகின் 'குயின்'

Actress Trisha Krishnan Quitting Cinema? : ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்று தென்னிந்தியத் திரையுலகின் 'குயின்' என்று அழைக்கப்படுபவர் நடிகை த்ரிஷா.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகியாக வலம் வருகிறார். சமீபகாலமாக அவர் குறித்த சில செய்திகள் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தாரா த்ரிஷா?

த்ரிஷா கடந்த மூன்று மாதங்களாக எந்தவொரு புதிய திரைப்படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாகப் பிஸியாக இருக்கும் அவர், திடீரெனப் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாதது அவர் திரையுலகை விட்டு விலகுகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, ஒரு பிரபல தெலுங்கு இயக்குநரின் பட வாய்ப்பைத் த்ரிஷா நிராகரித்ததாக வெளியாகும் தகவல்கள் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

ரிலீசாக இருக்கும் த்ரிஷாவின் படங்கள்

புதிய படங்களில் த்ரிஷா ஒப்பந்தமாகவில்லை என்றாலும், அவர் ஏற்கனவே நடித்து முடித்த பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.

நடிகர் சூர்யாவுடன் த்ரிஷா இணைந்து நடித்துள்ள இந்தப் படம் வரும் கருப்பு திரைப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது. அதேபோல்

மலையாளம் மற்றும் தெலுங்கில் த்ரிஷா

மோகன்லாலுடன் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ’ராம்’ திரைப்படம் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தெலுங்கில் நடித்துள்ள ’விஸ்வம்பரா’ என்ற பிரம்மாண்ட திரைப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

த்ரிஷா குறித்த சர்ச்சைகளும் கேள்விகளும்

சமீப காலமாக தென்னிந்தியாவின் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் த்ரிஷா குறித்துத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான பேச்சுகள் எழுந்து வருகின்றன.

த்ரிஷாவின் திடீர் மௌனம்

இத்தகைய சூழலில், த்ரிஷாவின் இந்தத் திடீர் மௌனம் மற்றும் புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருப்பது குறித்து அவர் சினிமாவில் இருந்து விலகப் போகிறாரா அல்லது அரசியலில் ஈடுபடப் போகிறாரா என்ற கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

உண்மை என்ன?

சில நேரங்களில் பிரபல நடிகைகள் பலரும் நீண்ட இடைவெளி எடுக்கும்போதோ அல்லது சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகும்போதோ இத்தகைய செய்திகள் பரவுவது வழக்கமானது.

ஆனால், த்ரிஷாவைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். எனினும் புதிய படங்களில் ஒப்பந்தமாகாதது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

====