ரிரீலிஸில் பட்டைய கிளப்பும் மங்காத்தா
Mankatha Re Release Box Office Collection in Tamil : அஜித் குமார் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான 'மங்காத்தா' திரைப்படம், வெளியாகி 15 ஆண்டுகள் நெருங்கினாலும் அதன் மிரட்டலான வரவேற்பு குறையவே இல்லை.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தற்போது ரீரிலீஸ் செய்துள்ளது. 2011-ல் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ நெகட்டிவ் ரோலில் ஒரு புதிய கண்ணோட்டத்தை வியக்கவைத்த இப்படம், இன்றும் ரசிகர்களிடம் அதே தாக்கத்தை ஏற்படுத்தி, ரசிகர்களை ரீரிலிஸில் குஷியில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களின் மங்காத்தா மோகத்தால் வசூல்
மங்காத்தா ரீரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இரண்டாம் நாள் வசூல் முதல் நாளை விட அதிகரித்து காணப்படுகிறது. இரண்டாம் நாளில் மட்டும் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை இப்படம் ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு ரீரிலீஸ் படத்திற்கு இரண்டாம் நாளில் வசூல் அதிகரிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. இது மங்காத்தா படத்தின் மீதான ரசிகர்களின் தீராத மோகத்தையும், அஜித் மீது ரசிகர்கள் கொண்டுள்ள பற்றையும் மிக தெளிவாக காட்டியுள்ளது.
கில்லியை மிஞ்சுமா மங்காத்தா
மங்காத்தா படத்தின் பிரதான இலக்காக இருப்பது விஜய்யின் 'கில்லி' ரீரிலீஸ் வசூல் சாதனைதான். 2024-ல் வெளியான கில்லி சுமார் 30 கோடி ரூபாய் வரை வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து ரஜினியின் 'படையப்பா' திரைப்படமும் நல்ல வசூலைப் பெற்றது. தற்போது சுமார் 450 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மங்காத்தா, அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவில் அமோக வளர்ச்சி கண்டுள்ளதால், மிக விரைவில் கில்லி மற்றும் படையப்பா ஆகிய படங்களின் சாதனைகளைத் தகர்த்து எறியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு வசூலை கிட்டுமா
சமூக வலைதளங்களில் மங்காத்தா வசூல் குறித்த புள்ளிவிவரங்கள் காட்டுத்தீயாய் பரவி வந்தாலும், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, இதன் வெற்றி ரிரீலிஸ் படங்களின் வரிசையில், இனி அசைக்க முடியாத வசூலை வாரிகுவித்து, மங்கத்தா ஒரு தனிப்பெரும் இடத்தை பெறும் என்று ரசிகர்கள் மீம்ஸ் மற்றும் டெம்ளேட்ஸ்களை பகிரந்து, கொண்டாடி வருகின்றனர்.
இருந்தபோதிலும், மங்காத்தா தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இதனை முடிவு செய்யும் என்பதே குறிப்பிடத்தக்கது.