5வது முறையாக அமெரிக்காவில் வெற்றி
Akhanda 2 Thaandavam Box Office Collection Worldwide : 65 வயதிலும் பாலகிருஷ்ணா சாதனைகளை முறியடித்து வருகிறார் என்றால் மிகையாகாது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த அகண்டா 2 திரைப்படம் தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளில் வெளிவந்து உலகளவில் பேசப்பட்டது.
அதாவது அமெரிக்க அளவில் வெளியான இவரது படத்திற்கு ரசிகர் பட்டாளம் குவிந்து வரும் நிலையில், 5 வது முறையாக சாதனை படைத்துள்ளார் நந்தமுரி.
வசூலை வாரிகுவிக்கும் அகண்டா 2
நந்தமுரி பாலகிருஷ்ணா சாதனைகளை படைத்து மற்ற ஹீரோக்களுக்கு சவால் விடுகிறார். பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் இவர், வெளிநாட்டு சந்தையையும் குறி வைத்துள்ளார்.
அகண்டா 2 மூலம் அவர் செய்த அற்புதம் என்னவென்றால் பாலகிருஷ்ணா-போயபதி கூட்டணியில் உருவான அகண்டா 2 கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் வேகம் காட்டியது.
அமெரிக்க பாக்ஸ் ஆஃபீஸில் பட்டைய கிளப்பும் பாலகிருஷ்ணா
அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், வட அமெரிக்காவில் தொடர்ச்சியாக 5 படங்களில் 1 மில்லியன் டாலர் வசூலித்த ஒரே சீனியர் ஹீரோ என்ற அரிய சாதனையை பாலகிருஷ்ணா படைத்துள்ளார்.
டோலிவுட் வரலாற்றில் ஒரு சீனியர் ஹீரோ இந்தளவு தொடர் வெற்றிகளைப் பெறுவது இதுவே முதல் முறை. வட அமெரிக்காவில் மொத்தம் ஆறு 1 மில்லியன் டாலர் படங்களைக் கொண்ட ஒரே சீனியர் ஹீரோ பாலகிருஷ்ணா தான் என்று சொல்லப்படுகிறது.
படத்தின் ரிசல்ட்டைப் பொருட்படுத்தாமல், பாக்ஸ் ஆபிஸில் தனது மார்க்கெட் சக்தியை பாலகிருஷ்ணா மீண்டும் நிரூபித்துள்ளார்.
உலகளவில் 120 கோடி வசூல்
அனைத்து மொழிகளிலும் மொத்தமாக அகண்டா 2 ரூ.91.49 கோடி வசூல் குவித்துள்ளது. உலகளவில் அகண்டா ரூ.120 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகண்டா 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் 'NBK 111' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவரது NBK 111 படமும் வசூலில் உச்சம் தொட்டு ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாடத்தை நிகழ்த்தும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
=========