Anirudh Ravichander 15 Years in Cinema Emotional Note source:thamizhalai
சினிமா

"இது வெறும் ஆரம்பம் மட்டுமே” இசையமைப்பாளராக 15 ஆண்டுகளை நிறைவு செய்த அனிருத்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!

இசையமைப்பாளராக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அனிருத் ரவிச்சந்தர், 2026-ல் வெளியாகும் ஜனநாயகன், ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களைக் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Kavitha prasanna

Anirudh Ravichander 15 Years in Cinema Emotional Note

15 ஆண்டுகால இசைப் பயணம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், திரையுலகில் தனது 15 ஆண்டுகால இசைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தனது முதல் பாடல் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அனிருத் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

மொழிகளைத் தாண்டிய இசை

15 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது முதல் பாடல் உலகிற்கு அறிமுகமானது. அன்றிலிருந்து இன்று வரை இசை, நினைவுகள் மற்றும் மாயாஜாலங்கள் நிறைந்த தடையற்ற பயணமாக இது அமைந்துள்ளது.

பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றியது பாக்கியம்

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என மொழிகளைக் கடந்து கோடிக்கணக்கான இதயங்களை சென்றடைந்துள்ளோம். சுயாதீன இசை (Independent music), சர்வதேசக் கலைஞர்களுடனான கூட்டணி மற்றும் நாட்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் பணியாற்றியது பெரும் பாக்கியம்.

உலகளாவிய இசை நிகழ்ச்சிகள்

ஸ்ட்ரீமிங் சாதனைகள் தொடங்கி, உலகம் முழுவதும் நிரம்பி வழிந்த மைதானங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் வரை ரசிகர்கள் காட்டிய அன்பு அளப்பரியது. ஆயிரக்கணக்கான குரல்கள் எங்கள் பாடல்களைத் திரும்பப் பாடிய தருணங்கள் கனவு போல் இருந்தன.

2026-ஆம் ஆண்டின் சிறப்புப் படங்கள்

இந்த 15-வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டு எங்களுக்கு மிக அற்புதமாக அமைந்துள்ளது. 'எல்.ஐ.கே', 'ஜனநாயகன்', 'டி.சி', 'பாரடைஸ்' மற்றும் 'ஜெயிலர் 2' ஆகிய படங்களுடன் இந்த 15-வது ஆண்டைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

புதிய இசை நிறுவனம்

எங்களுக்கு இவ்வளவு கொடுத்த இசைத் துறைக்கு திருப்பித் தரும் விதமாகவும், அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' (Albuquerque Records) என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம்.

இது வெறும் ஆரம்பம் மட்டுமே

இசை மீது கொண்ட தீராத காதலால், இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் உழைத்துள்ளோம்; இனியும் ஓய்வெடுக்கும் எண்ணமில்லை. எங்கள் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு, கொண்டாடி, ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் இந்தப் பயணம் சொந்தமானது.

ரசிகர்களுக்கு நன்றி

15 ஆண்டுகள் கடந்துவிட்டன; இன்னும் துரத்த வேண்டிய லட்சக்கணக்கான கனவுகள் உள்ளன. மீண்டும் ஸ்டுடியோவிற்குத் திரும்புகிறோம், சிறந்தவை இனிமேல்தான் வரவுள்ளன; இது வெறும் ஆரம்பம் மட்டுமே எனக் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு அனிருத் நன்றி தெரிவித்துள்ளார்.

==============