ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான்
AR Rahman's Peddi Chikiri Chikiri Video Song Goes Viral : ஏ.ஆர்.ரகுமான் இசையில் மூழ்காதோர் யாரும் கிடையாது அப்படி தனது சிறுவயது முதலே இசையில் அதீத ஈடுபாடு கொண்டு, தனக்கென தனிரசிகர் பட்டாளத்தையும் அமைத்து, இன்று வரை ஜொலித்து கொண்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் விருதுமட்டுமல்லாமல் , திரைத்துறையில் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார் என்றால் மிகையாகாது. இந்நிலையில், இசை இயக்குநரை தாண்டி ஒரு பாடகராகவும் வளம் வரும் இவரின் காந்த குரலுக்கு என்றும் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி சமீபகாலமாக இவர் இசையமைத்த நீ சிங்கம் தான் பாடல் உள்பட பல்வேறு மொழி பாடல்களும் இன்றளவும் வைரலாகி மக்கள் மத்தில் நெஞ்சம் கவர்ந்த பாடலகாவும் உலாவி வருகிறது.
பெத்தி பட பாடல் வைரல்
இந்நிலையில், தற்போது இவர் இசையமைத்துள்ள “பெத்தி” படத்தின் முதல் பாடலான “சிகிரி சிக்கிரி” சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது(Chikiri Chikiri Video Released in Tamil). ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்தப் பாடல், தற்போது 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கில் 64 மில்லியன் (6.4 கோடி) பார்வைகளையும் இந்தியில் 25 மில்லியன் (2.5 கோடி) பார்வைகளையும் பெற்றுள்ளது, அதே நேரத்தில் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியவற்றை சேர்த்து 11 மில்லியன் (1.1 கோடி) பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
பெத்தி படத்தின் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்தப் பாடலுக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கும் சக்தியாக ரகுமானின் கவர்ச்சிகரமான இசையும், ராம் சரணின் நடனமும் உள்ள நிலையில், இதன் கேமரா வடிவங்களும் காட்சிகளும் கன்னை கவர்ந்து பார்ப்பவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியாக உள்ள "பெத்தி" படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலே இத்தனை பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருவதால் இப்படத்தின் அடுத்த பாடலுக்கும், படத்திற்கும் ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.