Are Suriya's fans unhappy with director RJ Balaji? Advice posted by Suriya on Instagram! source: social media
சினிமா

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மீது சூர்யா ரசிகர்கள் அதிருப்தி? இன்ஸ்டாகிராமில் சூர்யா பதிவிட்ட ‘அன்பான’ அறிவுரை!

கருப்பு திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில், நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டோரி வைரல்.

Kavitha prasanna

Are Suriya's fans unhappy with director RJ Balaji? Advice posted by Suriya on Instagram!

நடிகர் சூர்யாவின் ’கருப்பு’ திரைப்படம்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரூ.300 கோடிக்கும் மேல் வசூல்

உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இத்திரைப்படத்தின் வெற்றி ஒருபுறமிருக்க, தற்போது சூர்யா ரசிகர்களுக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.

சர்ச்சைக்குக் காரணமான முதல்வர் விஜய்யுடனான சந்திப்பு

சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி, தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் ‘கருப்பு படத்தைத் தொடங்கி வைத்த மனிதருடன்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்,ஜே,பாலாஜி

மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, ‘கருப்பு’ படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் கூறியதாகவும், அரசியல் ஈடுபாடு காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனதால் சூர்யா இதில் இணைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கொந்தளித்த சூர்யா ரசிகர்கள்

ஆர்.ஜே. பாலாஜி தொடர்ந்து முதல்வர் விஜய்யை முன்னிலைப்படுத்தி பேசி வருவது சூர்யா ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்கள் ஆர்.ஜே. பாலாஜியை விமர்சிக்கத் தொடங்கினர்.

சூர்யாவின் பதிவு

இந்த சூழலில், தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "அன்புடன் முன்னே செல்லுங்கள். பணிவாக இருங்கள். பெருந்தன்மையுடன் இருங்கள்" (Lead with love. Stay kind. Stay generous) என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதள பயனர்கள் கருத்து

நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், ஆர்.ஜே. பாலாஜியை விமர்சித்து வரும் தனது ரசிகர்களை அமைதிபடுத்தவே சூர்யா இத்தகைய பக்குவமான பதிவை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவின் இந்த செயல் சினிமா வட்டாரத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

======