Bhagyaraj legend of Tamil cinema successfully directed many films, top ten of them google
சினிமா

K.Bhagyaraj : "திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ்" : காலத்திற்கும் நிற்கும் 10 படங்கள், தமிழ் சினிமாவின் காவியங்கள்...

தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக அழைக்கப்படும், பாக்யராஜ் பல படங்களை வெற்றிகரமாக இயக்கி இருந்தாலும், குறிப்பாக 10 படங்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

Kannan

இந்திய அளவில் தமிழ் சினிமா

தமிழ் திரையுலகை இந்திய அளவில் எடுத்துச் சென்றவர்களில் தவிர்க்க முடியாத ஒருவர் பாக்யராஜ் (Bhagyaraj). நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்திறமை கொண்ட இவரது திடீர் மறைவு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

திரைக்கதை, வசனத்திற்காக கொண்டாடப்படும் இவரது படைப்புகளில், முக்கியமான காவிய படங்களை என்னென்ன என்று பார்க்கலாம்.

இன்று போய் நாளை வா

பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’இன்று போய் நாளை வா’. முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் 1981ம் ஆண்டு வெளியானது.

ஒரு பெண்ணை விரும்பும் 3 வேலையில்லாத இளைஞர்களைப் பற்றிய திரைக்கதை. இதை மிக மிக ரசிக்கும் வகையில் எடுத்து மாபெரும் வெற்றிப் படமாக மாற்றி, தொடக்கம் முதல் இறுதி வரை ரசிக்க செய்து வியக்க வைத்தவர் பாக்யராஜ்.

மெளன கீதங்கள்

பாக்யராஜ் நடித்து இயக்கி வெற்றி பெற்ற படம் மெளன கீதங்கள். பாக்யராஜும், சரிதாவும் நடிப்பில் மாறி, மாறி அசத்தியிருப்பார்கள்.

பிரச்னையால் பிரிந்து வாழும் கணவன் - மனைவி மீண்டும் எப்படி இணைகிறார்கள்? என்பதே கதை. இந்த படத்தில் இடம்பெற்ற மூக்குத்தி பூ மேலே பாடல் மிக மிக பிரபலம்.

அந்த 7 நாட்கள்

திரைக்கதைக்கு இன்றளவும் எடுத்துக்காட்டாக திகழும் ஒரு திரைப்படம் அந்த 7 நாட்கள். சந்தர்ப்ப சூழலில் பிரிந்திருக்கும் காதலியும், காதலனை மறக்க முடியாமல் தவிக்கும் மனைவியுடன் வாழும் கணவனும், அவர்களை எதிர்கொள்ளும் அந்த காதலனும் ஆகிய 3 பேரையும் மையப்படுத்தி நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பாக்யராஜ் எடுத்த திரைப்படம் அந்த 7 நாட்கள்.

இறுதிக் காட்சியில் பாக்யராஜ் பேசும் சாரே என்ட காதலி நின்ட மனைவியாகலாம். பச்சே நின்ட மனைவி ஒருபோதும் என்ட காதலியாகாது என்ற வசனம் என்றும் அக்மார்க் ஒன்றுதான்.

முந்தானை முடிச்சு

பாக்யராஜ் இயக்கத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொண்டாட வைத்த முந்தானை முடிச்சு. இந்த படத்தில் மனைவியை இழந்த கணவனாக நடித்து அசத்தியிருப்பார்.

குடும்ப கதைகளை கையாள்வதில் மன்னனான பாக்யராஜ் முருங்கைக்காயை வைத்து ஒரு காட்சி எடுத்து இந்த படத்தை பிரபலமாக்கியிருப்பார்.

பாக்யராஜுன் முந்தானை முடிச்சு என்றுமே தவிர்க்க முடியாத தமிழ் திரைப்படம் ஆகும்.

சின்ன வீடு

பாக்யராஜின் மைல்கல்லில் மற்றொரு திரைப்படம் இந்த சின்ன வீடு. மிகவும் அழகான பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளைஞன், எடை அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்டபின்பு அவன் அந்த பெண்ணை எப்படி நடத்துகிறான்?

பின்னர் அவனுக்கு அவள் மீது எப்படி காதல் வருகிறது? என்பதை மிக அழகான திரைக்கதையால் யதார்த்தமாக விளக்கியிருப்பார். சபல புத்தி கொண்ட கணவனாக நடிப்பில் அசத்தியிருப்பார்.

அவசர போலீஸ்

குடும்ப கதை நாயகனாக அசத்திக் கொண்டிருந்த பாக்யராஜ் ஆக்ஷன் ஹீரோவாக அசத்திய திரைப்படம் அவசர போலீஸ். எம்ஜிஆரை வைத்து எடுத்து பாதியிலே நின்று போன படத்தின் காட்சிகளை வைத்து திரைக்கதை உருவாக்கி பாக்யராஜ் அசத்தியிருப்பார். இரட்டை வேடத்தில் மிகவும் அசத்தலான நடிப்பை வழங்கியிருப்பார்.

ராசுக்குட்டி

பாக்யராஜின் மற்றொரு அற்புதமான ஆக்ஷன் காமெடி திரைப்படம் இந்த ராசுக்குட்டி. அவரே இயக்கி நடித்த இந்த படத்தில் மைனராக உலா வரும் இளைஞன் தான் தனது பெற்றோர்களால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படும் மகன் என்பதை அறிந்து மனம் திருந்தி எப்படி வாழ்கிறான் என்பதே கதை.

தாவணிக் கனவுகள்

பாக்யராஜ் இயக்கத்திலும் அவரது நடிப்பிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்த தாவணிக் கனவுகள். 1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

5 தங்கைகளை நல்ல முறையில் வாழ வைப்பதற்காக போராடும் ஒரு அண்ணனின் சிரமங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படமே இந்த தாவணிக் கனவுகள். எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படமாகும்.

வேட்டிய மடிச்சு கட்டு

1998ம் ஆண்டு வெளியான இந்த படம் மற்றொரு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படம் ஆகும். இந்த படத்தில் நக்மா, சாய்குமார், அவரது மகன் சாந்தனு ஆகியோர் நடித்திருப்பார்கள்.

பயந்த சுபாவம் கொண்ட தந்தை தனது மகனிடம் தான் தைரியசாலி என்று பொய்யை கூறி அவனை தைரியசாலியாக வளர்ப்பதும், அவர் கூறிய பொய்யால் வரும் விளைவுகளையும் மிகவும் ரசிக்கும் வகையில் எடுத்திருப்பார்.

சொக்கத்தங்கம்

பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சொக்கத்தங்கம். ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வந்த விஜயகாந்தை முழுக்க முழுக்க குடும்ப நாயகனாக இந்த படத்தில் பாக்யராஜ் காட்டியிருப்பார்.

அசத்தலான குடும்ப படமாக திரைக்கதையை எழுதிய விஜயகாந்த், செளந்தர்யா, கவுண்டமணி, செந்தில், பிரகாஷ்ராஜ் என பெரிய பட்டாளமே நடித்திருப்பார்கள்.

===============