பைசன் கதைக்களம்
Bison Movie Box Office Collection Worldwide Total : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் பைசன் காளமாடன். மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அப்லாஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பைசன் வெற்றி
மாரி செல்வராஜின் தொடர் இயக்கத்தில் வெளிவரும் படங்களில் மக்கள் மனதை வென்று விடும் இடத்தில் இந்தப்படமும் தற்பொழுது தனி இடத்தை பிடித்துள்ள நிலையில், வணிக ரீதியாகவும் இதன் வெற்றி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
பைசன் வசூல்
வாழை படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜின் பைசன் திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கபடும் நிலையில், இந்த படத்தின் முதல் வசூலாக ஒரு நாளில் 7 முதல் 8 கோடி தாண்டி இருந்தநிலையில், தற்பொழுது 10 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூல்(Bison Box Office Collection Worldwide Total) செய்துள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீப நாட்களின் முன் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் துருவ் விக்ரம், நடித்த படங்களை தாண்டி இதுவே எனது முதல் படம் என்று பைசன் திரைப்படத்தை கூறி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திரையில் பார்க்கமுடியாத பைசன் திரைப்படத்தை மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் ரசிகர்கள் ஓடிடி வெளியீட்டிற்கு காத்திருக்கின்றனர். தற்பொழுது 50 கோடியை தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கும் பைசன் திரைப்படம், ஓடிடியில் வெளியானால் அதன் வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.