முதல்வர் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
நள்ளிரவு வாழ்த்தும் நெட்டிசன்களின் கேள்விகளும்
ஜூன் 22 அன்று முதலமைச்சர் விஜய் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளுக்குத் தனது செல்லப்பிராணியை அவர் கையில் வைத்திருக்கும் படத்தை வெளியிட்ட த்ரிஷா, இந்த ஆண்டு பிறந்தநாளன்று வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஆனால், மறுநாள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், நள்ளிரவு 00:00 மணிக்கு விஜய் கேக் வெட்டும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, "எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையானதா? அல்லது ஏஐ புகைப்படமா?
இந்த புகைப்படம் உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
2024 -ல் எடுக்கப்பட்டதா?
ஒரு தரப்பினர் விஜய் அணிந்திருக்கும் சட்டையை வைத்து இது 2024-இல் எடுக்கப்பட்ட பழைய படம் என்று கூற, மற்றொரு தரப்பினரோ, படத்தில் இருக்கும் மொபைல் போன் மாடல் 2025-இல் தான் வெளியானது என்பதால் இது பழைய படம் அல்ல என வாதிடுகின்றனர்.
ஹைதராபாத் 'டிராமிசு' கேக்
இந்த விவாதங்களுக்கு நடுவே, அந்த மேஜையில் இருந்த கேக்குகளை வைத்து ரசிகர்கள் புதிய துப்பறியும் வேலையில் இறங்கியுள்ளனர். அங்கு இத்தாலிய வகையான 3 சிறிய 'டிராமிசு' கேக்குகளும், 2 பெரிய மேங்கோ மற்றும் ஸ்ட்ராபெரி கேக்குகளும் இருந்தன.
வைரலாகும் 'டிராமிசு' கேக்
இதில் உள்ள குறிப்பிட்ட 'டிராமிசு' கேக்குகள் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான கடையில் மட்டுமே கிடைக்கும் என்பதால், அதை த்ரிஷா எப்படி சென்னைக்குக் கொண்டு வந்தார் என்று ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
சர்ச்சை குறித்து த்ரிஷா தரப்பு?
இந்தச் சர்ச்சைகள் குறித்து நடிகை த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும் மற்றொருபக்கம் அந்த கேக் வகைகள் இப்போது இணையத்தில் அதிகளவில் தேடப்பட்டு வருகிறது.
====