கூலி திரைப்படம் :
Coolie Movie Monica Song Views on YouTube : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்னும் அவரின் முதல் படத்தின் மூலம், மக்களின் மத்தியில் நல்லதொரு பெயரை பெற்று கைதி, மாஸ்டர் என முண்ணனி நட்சத்திரங்களை கொண்டு இன்று படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திர இயக்குநராக வலம் வருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக ரஜினிகாந்த், நாக அர்ஜுனா,அமீர் கான், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என அனைத்து மொழி திரையுலக ஸ்டார்களையும் ஒன்றிணைத்து இவர் இயக்கிய படம் கூலி. ரஜினிகாந்தின் முந்தைய கதையை இணைத்து தற்போதைய தலைமைமுறைக்கு ஏற்ப, சாயல் கொண்டு வந்து படத்தினை வெளியிட்டார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப்படம், அவரின் மற்ற படங்களைப்போல் பேசப்படவில்லை, மேலும், வணிக ரீதியாகவும் அவரின் முந்தைய பட வசூலை முறியடிக்கவில்லை. இதனால், திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் லோகேஷ் மார்க்கெட் குறைந்தது என்று சில கிசுகிசுப்பு சுற்றி வந்தது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சில நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தி, காரணங்களை கூறி பதிலளித்தார்.
ரசிர்கள் கொண்டாடத்தில் மோனிகா பாடல்
இந்த சூழலில், கூலி திரைப்படத்திற்கான ஆரவாரம் மற்றும் மற்ற படங்களின் வருகையால், இயல்பை போல ரசிகர்களின் கொண்டாடங்கள் குறைந்தது.
ஆனால், அந்த படத்தை தாண்டி, படத்தில் அனிருத் இசையமைத்து, நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் சாஹிர் ஆகியோர் நடனமாடி வெளிவந்த மோனிகா பாடல் தொடர்ந்து உலக அளவில் அனைத்து சமூக வலைதளங்களிலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அப்பாடலுக்கென தனி ரசிகர் கூட்டம் உருவெடுத்ததையடுத்து தற்போது அப்பாடலின் சாதனை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
மோனிகா பாடல் சாதனை
படம் வெளியான முதல், மக்கள் மத்தியில் தொடர்ந்து இசைக்கப்பட்ட மோனிகாக பாடல், தற்போது ரசிகர்களை தொடர்ந்து வெகுவாகக் கவர்ந்து, கொண்டாடப்பட்டு யூடியூபில் 10 கோடிக்கும் மேலான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து பார்வையாளர்கள், அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மீண்டும் ரசிகர்கள் மோனிகா பாடலை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.