இன்றைய சினிமா
30 Years Of Dilwale Dulhania Le Jayenge : தமிழ் சினிமா, இந்தியா மட்டுமல்லாது உலக சினிமா என சினிமாவிற்கு ரசிகர் ஏராளம்.அதன்படி, ஒவ்வாரு மொழி படத்திற்கும் ஒவ்வொரு ரசிகர் பட்டாளம் இருக்கும், சிலர் சினிமா என்றாலே ரசிகர் தான். இன்றைய சினிமா முதல் முந்தைய சினிமா வரை திரை பிரியராக தியேட்டர் சென்று படத்தின் ரிலீஸ் அன்று கொண்டாடி தீர்ப்பர்.அதன்படி, 30 வருடமாக ஒரே படம் இன்றுவரை வசூல், இன்றைய தலைமுறைகளும் பார்த்து நேரத்தை கழிக்கின்றனர். மும்பையில் பட்டைய கிளப்பி ஓடி கொண்டிருக்கும் இப்படத்தின் டிக்கெட் விலை வெறும் 30 முதல் 50 ரூபாய் தான், அப்படியும் மவுசு குறையாமல் இருக்கும் இந்த படம் குறித்து முழுவதுமாக பார்க்கலாம்.
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே :
அந்தப் படம் தான் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி(DDJL Release Date) திரையரங்குகளில் வெளியான ‘தில் வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே’ (Dilwale Dulhania Le Jayenge). ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் யாஷ் சோப்ரா தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் கஜோல் நாயகியாக நடித்துள்ளார். அம்ரீஷ் புரி, ஃபரிதா ஜலால், அனுபம் கெர், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
100 கோடி வசூல்
படத்துக்கு ஜதின் - லலித் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ‘க்ளாசிக்’ ஹிட். இன்றளவும் ஏராளமானோருக்கு இந்தப் பாடல் ஃபேவரைட் லிஸ்டில் ஒன்று எனக்கூட சொல்லலாம். இந்தப் படத்தில் ஷாருக்கான் - கஜோல் இணையின் கெமிஸ்ட்ரி வெகுவாக பேசப்பட்டது. காதல் கதை தான் என்றாலும், அதை திரைக்கதையாக்கிய விதம்தான் இன்றும்கூட ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து செல்கிறது. அந்த காலத்தில் ரூ.4 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.100 கோடியை(DDJL Box Office Collection) வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஒரே தியேட்டரில் 30 ஆண்டுகள்
தேசிய விருது வென்ற இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 30 ஆண்டுகளை கடந்துள்ளது. ஆனாலும், இன்றும் மும்பையில் உள்ள மராத்தா மந்திர்(DDJL 30th Anniversary Maratha Mandir) என்ற திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 முதல் 50 ரூபாய் டிக்கெட் விலை
30 முதல் 50 ரூபாய் மட்டுமே இப்படத்திற்கு டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டு, இன்றளவும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு படத்தை நிறுத்த தியேட்டர் நிர்வாகம் திட்டமிட்ட நிலையில், ரசிகர்கள் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : ஜீரோவில் இருந்து ஹீரோ - மனம் திறந்த ரிஷப் ஷெட்டி!
30 ஆண்டுகளாக படம் பார்க்கும் பெண்மணி
தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் திரையிடப்படும் இந்த படத்திற்கு பெண் ஒருவர் 30 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறாராம், அவருக்கு படத்திற்கான டிக்கெட் வசூலிக்கப்படுவதில்லையாம்.100 நாட்கள் ஓடி வெற்றிகாணும் படங்களுக்கிடையில், தொடர்ந்து 30 வருடம் ஓடி சாதனை படைத்திருக்கிறது என்றால் இது இந்திய சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியே.