Dhanush Aanand L Rai 4th Movie Period Action Love Story 2027 source: google
சினிமா

’பீரியட் ஆக்‌ஷன் காதல் கதை’ 4-வது முறையாக இணையும் தனுஷ் : யார் அந்த பிரபல இயக்குநர்?

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய், நடிகர் தனுஷ் கூட்டணியில் புதிய படம் குறித்த விரிவான செய்தி....

Kavitha prasanna

Dhanush Aanand L Rai 4th Movie Period Action Love Story 2027

பீரியட் ஆக்‌ஷன் காதல் கதையில் தனுஷ்

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை வெளியான இவர்களது கூட்டணித் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இந்தப் புதிய திரைப்படம் ஒரு பிரம்மாண்ட 'பீரியட் ஆக்‌ஷன் காதல் கதையாக' உருவாகவுள்ளது.

தற்போது ஆரம்பக்கட்டத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2027) மார்ச் அல்லது கோடை காலத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனுஷ் - ஆனந்த் எல். ராய் கூட்டணியின் முந்தைய வெற்றிப் படங்கள்

இந்திய சினிமாவில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் தனுஷ் மற்றும் இயக்குநர் எல். ராய் இதற்கு முன்பு இணைந்து பணியாற்றிய மூன்று படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.

1. ராஞ்சனா (2013)

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இத்திரைப்படத்தின் மூலமே தனுஷ் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இந்தியில் ஜூன் 2013-லும், தமிழில் 28 ஜூன் 2013-லும் வெளியானது.

2. அத்ரங்கி ரே (2021)

தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2021 டிசம்பர் 24 அன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தியில் அத்ரங்கி ரே என்றும் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியானது.

3. தேரே இஷ்க் மே (Tere Ishk Mein)

தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் நவம்பர் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது தனுஷ், ஆனந்த் எல். ராய் கூட்டணி நான்காவது முறையாக இணைய உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

புதிய படத்தின் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளுடன் உருவாகவுள்ள இந்தப் புதிய திரைப்படத்திற்காக, 'டான் 2', 'யூரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்', 'சாஹோ' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டீபன் ரிக்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

======================