Dhanush OM Operation Mole Trailer Trending Title Change
நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55-வது திரைப்படமான 'ஓம்' படத்தின் தலைப்பில் தணிக்கைக் குழு பிரச்சனைகள் காரணமாக திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு மாற்றம் மற்றும் புதிய பெயர் அறிவிப்பு
முதலில் இப்படத்திற்கு 'ஓம் சேப்டர் 1: உதிரம் தி ப்ளட் வுட்' (OM CHAPTER: 1 UDHIRAM THE BLOOD WOOD) என்று தலைப்பிடப்பட்டிருந்தது. தற்போது தணிக்கைக் குழு சிக்கல்களைத் தொடர்ந்து, 'ஓம்: ஆபரேஷன் மோல்' (O.M OPERATION MOLE) என்று அதிகாரப்பூர்வமாக தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த டிரெய்லர்
வரும் நவம்பர் 20-ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் நள்ளிரவில் வெளியானது.
வெளியான குறுகிய நேரத்திலேயே இந்த டிரெய்லர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாகப் படக்குழு பிரத்யேக போஸ்டர் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
பிரம்மாண்ட கூட்டணி மற்றும் இசை வரவேற்பு
'அமரன்' புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை, தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
நசிகர் தனுஷுடன் இணைந்து மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசை
இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இவரது இசையில் வெளியான 'அலாக்கா லோவா', 'வீழா வீரா' மற்றும் 'ஃபா... ஃபா..' ஆகிய மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
=================