Director and actor Pradeep Ranganathan is set to make his debut as a producer:
MOVIE UPDATE 2026 : முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்க உள்ளார்.
கோமாளி திரைப்படத்தில் அறிமுக இயக்குநர்
2015 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் காதல் என்ற குறும்படத்தின் மூலம் கவனம் பெற்று அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில், வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் ’கோமாளி’ என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தார்.
கோமாளி திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் பிரதீப் ரங்கநாதன் தோன்றினார்.
’லவ் டுடே’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம்
இதைத்தொடர்ந்து 2022இல் வெளியான லவ் டுடே படத்தில் கதாநாயகனாக நடித்து மக்களிடையே பிரபலமானார்.
’டியூட்’ பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட்
அண்மையில் வெளிவந்த இவருடைய டியூட் திரைப்படம் பல கோடிகளை குவித்து பாக் ஆபீஸ் ரெக்கார்டு செய்தது.
₹35 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட டியூட் திரைப்படம், முதலீட்டில் 109% வருமானத்தையும், இந்திய அளவில் ₹73.1 கோடி நிகர வசூலையும் குவித்தது .
கோமாளி, லவ் டுடே, டிராகன், டியூட் என பிரதீப் ரங்கநாதனின் படங்கள் அனைத்தும் வெற்றி வாகை சூடியது என்றே சொல்லலாம்.
அந்தவகையில் பிரதீப் ரஙநாதனின் டியூட் திரைப்படம் கோடிகளை குவித்து தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றிப் படமாகவும் உள்ளது.
தயாரிப்பாளராக களமிறங்கும் பிரதீப்
தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் இயக்குநர், நடிகர் என்ற நிலையில் இருந்து தற்போது தயாரிப்பாளராக களமிறங்குகிறார்.
கதாநாயகியாக மமிதா பைஜூ
பிரதீப் ரங்கநாதனின் கதையை அவரது உதவி இயக்குநர் இயக்க உள்ளதாகவும் , கதாநாயகியாக மமிதா பைஜூ ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரே கட்டமாக படபிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக களமிறங்கவுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.