செக் மோசடி வழக்கில் சிக்கிய இயக்குநர் லிங்குசாமி
Director Lingusamy Imprisonment in Fraud Case : ஆனந்தம், பீமா, சண்டகோழி உள்ளிட்ட பிரபல திரைப்படத்தை இயக்கி தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குனர் லிங்குசாமி. அவர் தொடர்ந்து படங்களை கொடுக்கவில்லை என்றாலும், அவரின் பழைய படங்களுக்கென ரசிகர் மத்தியில் இன்றளவும் மவுஸ் இருக்கிறது. இவர் சமீபத்தில், செக் மோசடி வழக்கில் சிக்கினர். இதுகுறித்து வழக்கு விசாரணை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஓராண்டு சிறை தண்டனை
இதுகுறித்து வழக்கு தற்போது விசாரணைக்கு வந்நதது, அதாவது இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் திருப்பதி ப்ரதர்ஸ் பிலிம் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு ரூ.35 லட்சம் பணத்தை ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை லிங்குசாமி திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடனை வட்டியுடன் ரூ.48.68 லட்சமாக செலுத்துமாறு அந்த நிறுவனத்தில் மேலாளர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது.
48.68 லட்சத்தை 2 மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்
இத்துடன் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் ரூ.48.68 லட்சமாக 2 மாதத்திற்குள் திருப்பித்தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பிரபல இயக்குநரான லிங்குசாமி தற்போது சிறை செல்ல உள்ளார் என்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வளையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் தற்போதைய நிலை குறித்து அவரது ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ஷேர் செய்து வருகின்றனர்.