Director S S Rajamouli Praises Rishab Shetty for Kantara Chapter 1 
சினிமா

Kantara: Chapter -1 : ’ரிஷப் ஷெட்டி’யை புகழ்ந்து தள்ளும் ராஜமௌலி

Director S S Rajamouli Praises Rishab Shetty for Kantara Chapter 1 : காந்தாரா சாப்டர் 1 படத்தை பார்த்து வியந்து போன பாகுபலி ராஜமோலி, ரிஷப் ஷெட்டியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

Kannan

சக்கைபோடு போடும் காந்தாரா :

Director S S Rajamouli Praises Rishab Shetty : ரிஷப் ஷெட்டி (Rishab Shetty) நடித்து, இயக்கிய காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1) திரைப்படம் உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டு வருகிறது. உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, 30 நாடுகளில் ஒரு நாளைக்கு 5,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது. முக்கிய பிரமுகர்கள் பலர் படத்தைப் பார்த்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக கன்னட திரையுலகை பாராட்டி தள்ளுகின்றனர்.

காந்தாரா விமர்சனம் - ராஜமௌலி

இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி(SS Rajamouli Kantara Review), 'காந்தாரா சாப்டர் 1 படத்தைப் பார்த்து தனது விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார். “படத்தை பார்த்து பேச்சிழந்து போனேன்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நமது கலாச்சாரம் மற்றும் மண்ணின் கதைகளைச் சொல்வதில் கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகம் முன்னணியில் உள்ளன. இந்தப் படத்தைப் பார்க்கும்போது ரிஷப் ஷெட்டியிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என நினைக்கிறேன்.

ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது?

ரிஷப் ஷெட்டிக்கு காந்தாரா சாப்டர் 1, படத்திற்காக 'தேசிய விருது' கிடைக்கா விட்டால் நான் ஆச்சரியப்படுவேன்.. நிச்சயமாக அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்' இவ்வாறு ராஜமௌலி(SS Rajamouli on Kantara 2 Movie) புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

25 ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜமௌலி, ரிஷப் ஷெட்டி குறித்து கூறியிருக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, அவரது கணிப்பின்படி ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என ரசிகர்களும் வாழ்த்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க : Kantara : வசூலில் உச்சம் தொட்ட காந்தாரா சாப்டர் 1! இவ்வளவு கோடியா?

2வது முறை தேசிய விருது!

ரிஷப் ஷெட்டி மூலம் கன்னடத்திற்கு 'காந்தாரா சாப்டர் 1' வழியாக மற்றொரு தேசிய விருதை எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள். காந்தாரா முதல் பாகத்தில் நடித்ததற்காகவே ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது(National Award for Kantara) கிடைத்தது. அதன் இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாக ராஜமெளலி கணித்து இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

===========