Director Sundar C Out Of Rajinikanth's Next Thalaivar 173 Under Banner Raaj Kamal International Films Google
சினிமா

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர் சி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகி உள்ளதாகவும், ரசிகர்கள் தனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுவதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bala Murugan

கமல் ரஜினி கூட்டணியில் இருந்து சுந்தர் சி விலகல்

Director Sunder C on Thalaivar 173 Movie Update in Tamil : கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக, புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. முன்கூட்டியே, ரஜினிகாந்தின் 173 வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளிவந்த நிலையில், ரஜினியின் படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பது ரஜினி- கமல் ரசிகர்ளை பரவசத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இப்படத்தின் தொடர் அப்டேட்டை எதிர்நோக்கி இருந்த ரசிகர்களுக்கு திடுக்கிடும் அறிக்கை ஒன்றை இயக்குநர் சுந்தர் சி பகிர்ந்துள்ளார்.

சுந்தர் சி அறிக்கை

அதவாது ரஜினி- கமல் கூட்டணியில், ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்குவதாக(Thalaivar 173 Movie Director Sunder C) இருந்த நிலையில் அதிலிருந்து தான் விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுந்தர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன். புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். ஆர்வத்துடன் காத்திருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியதில் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விலகுவது வருத்தம் அளிக்கிறது

மேலும், தவிர்க்க முடியாத மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகள்" காரணமாக, இந்தப் பிரம்மாண்டமானத் திட்டத்திலிருந்து விலக வேண்டிய கடினமான முடிவை எடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறார். "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும், தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களையும் வைத்துப் படம் இயக்குவது என்பது, எனக்கு நிஜமாகவே ஒரு கனவு நனவான முயற்சி" என்று கூறிய அவர் அதிலிருந்து விலகுவது மனதிற்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, வாழ்வில் நாம் நம் கனவு பாதையிலிருந்து விலகும் தருணங்கள் வரும்போதும், எங்களின் உறவு நீடிக்கும். இந்தக் கலைஞர்கள் இருவர் மீதும் நான் எப்போதுமே மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த மகத்தானத் திட்டத்திற்காக தன்னையும் பரிசீலித்த இருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தப் படம் மகத்தான வெற்றிபெறத் தனது வாழ்த்துகளையும் சுந்தர் தெரிவித்திருக்கிறார். மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த ரசிகர்களுக்க இப்படி ஒரு பேரதிர்ச்சி வந்துள்ள நிலையில், இந்த படம் குறித்த அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்றுத் திரையுலகம் மற்றும் ரசிகர் பட்டாளம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.