Diwali Release Movies Tamil 2025 List Update Bison Diesel Dude Films Released for Deepavali 
சினிமா

தீபாவளிக்கு முன்னரே திரை கொண்டாட்டம்! : 3 படங்களில் எது பெஸ்ட்?

Diwali Release Movies Tamil 2025 List : இந்த ஆண்டு தமிழல் தீபாவளிக்கு 3 படம் எந்த படம் பெஸ்ட் என படத்தின் டிரைலர் வரவேற்பு கூறிவிட்டது.

Bala Murugan

Diwali Release Movies Tamil 2025 List : தீபாவளிக்கு ஆண்டுதோறும் தமிழக திரையுலகில், படங்கள் வெளியாகி தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். அதிலும் முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம், பட்டாசு சத்தமும், புத்தாடை சுத்தமும் என விசில் சத்தமும் திரையரங்குகளில் பட்டைய கிளப்பும்.

2025 தீபாவளி கொண்டாட்டம்

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான தீபாவளி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதன்படி, தீபாவளி கொண்டாட்டமாக 3 நாட்களுக்கு முன்னரே திரையரங்குகளில் கொண்டாட்டம் தொடங்கப்பட உள்ளது. அதாவது வரும்கால முன்னணி நட்சத்திரம் என்னும் பட்டியலில், முதலிடத்தை பிடிக்கும் முயற்சியாக 3 ஹீரோக்களின் படமும் தீபாவளிக்கு, 3 நாட்களுக்கு முன்னரே வெளியாகவுள்ளது.

பைசன் திரைப்படம்

அந்த வரிசையில் முதல் படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில், நிவாஸ் பிரசன்னா இசையிலும், எழிலரசு ஒளிப்பதிவாக்கியுள்ள இந்த படம் தீபாவளியை ஒட்டி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது(Bison Movie Release Date). இதன் எதிர்பார்ப்பு படத்தின் முதல் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இதன் டிரைலர் மற்றும் பட வெளியீடு குறித்த தேதியையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் பைசன் காலமாடன் என்னும் தலைப்பில் வெளியாகி இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மாரிசெல்வராஜின் படங்கள்

இதற்கு முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த பரியேறும் பெருமாள், மாமன்னன், உள்ளிட்ட படங்கள் பெருமளவில் வசூலை வாரி குவிக்கவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகவுள்ள பைசன் படத்தின் டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த படத்தின் வசூல் இதுவரை வெளியான மாரிசெல்வராஜின் படத்தின் வசூலை தாண்டி முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஷ் கல்யாணின் டீசல்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பிலும், நிபு தாமஸ் இசையிலும் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது(Diesel Movie Release Date). இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி 3. 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. காதல், காமெடி என நடிப்பில் கலக்கி வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், தற்பொழுது புதிய உத்வேகத்தில், புதிய தோற்றத்தில் டீசல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது டிரைலரின் வழியாக தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தினை எதிர்நோக்கியுள்ள ரசிகர்கள், டிரைலர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிரதீப் ரங்கநாதனின் டியூட் வெளியீடு

கோமாளி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் காலடி பதித்த பிரதீப் ரங்கநாதன், பிறகு லவ் டுடே படத்தில் மூலம் கதாநாயகநாக அறிமுகமாகி, தமிழ் சினிமா களத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இந்நிலையில், தொடர்ந்து நடிக்கப் போவதாக அறிவித்த பிரதீப் ரங்கநாதன், தனது நண்பனான ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். இந்தப்படம் மக்களின் மனதில் இடம் பிடித்ததை தாண்டி, நல்லதொரு வசூலையும் வாரி குவித்தது. இது பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய படிக்கட்டாக அமைந்தது.

பிரதீப் படம் என்றால், நன்றாக இருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி கொண்டிருக்கும் நிலையில், இவரின் அடுத்த படங்களாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மற்றும் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்னும் படம் வெளியாக உள்ளது என்று தகவல் வெளிவந்தது.

டியூட் வெளியீடு

இந்நிலையில், இரண்டாம் படத்தில் முதல் படமாக கீர்த்தீஸ்வரன் படமாகிய டியூட் வருகிற 17 ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக(Dude Movie Release Date on Diwali 2025) வெளியாகவுள்ளது.தற்பொழுது இப்படத்தின் டிரைலர் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. லவ்டுடே வின் நகலாக இப்படத்தின் டிரைலர் இருக்கிறது என கமென்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் இப்படத்தினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

வெற்றி யாருக்கு

மாரிசெல்வராஜ், கீர்த்தீஸ்வரன், சண்முகம் முத்துசாமி என இயக்குநர்களின் படங்களை தாண்டி இப்படத்தின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களாகிய இம்மூவர்களின் படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதனால், அவர் அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமும் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வரவேற்பும், வசூலும் எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் படிக்க : வெளியானது டியூட் படத்தின் டிரெய்லர்! இத்தனை லட்சம் பார்வையாளர்களா?

வெற்றி யாருக்கு என கணக்கு போட்டால், தீபாவளிக்கு பரிசாக திரை ரசிகர்களுக்கு 3 படங்கள் வெளியாகி தீபாவளியை கொண்டாட்டத்தின் உச்சிக்கு கொண்டு சென்று நெகிழ்ச்சியை ஆழ்த்தும் என்பது மட்டும் உண்மை. இந்நிலையில்,இந்த ஆண்டு தீபாவளி திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் வெற்றியடைய செய்யும் என்பது மட்டும் தெரிகிறது.