https://x.com/SathyabamaSIST?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
சினிமா

இயக்குநர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம்

பிரபல இயக்குநர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Kannan

தமிழில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அட்லீ.

2023ம் ஆண்டு அட்லீ – பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோரது கூட்டணியில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம், 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

ஐந்தே படங்களில் பெரும் உச்சத்தை அடைந்துள்ள அட்லிக்கு, பெருமை சேர்க்கும் வகையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் படித்த சத்யபாமா பல்கலைக் கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

விழாவில் பங்கேற்க வந்த அட்லிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெலுங்கு பட ஹீரோ அல்லு அர்ஜூனின் 22வது படத்தை, தற்போது அட்லி இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோனும் இணைந்துள்ளார்.

=====