'Durandhar 2' on a Box Office Rampage: Netflix Announces OTT Release Date! source:google
சினிமா

வசூல் வேட்டையில் 'துரந்தர் 2' : ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தது நெட்ஃபிளிக்ஸ்!

dhurandhar 2 ott release date netflix:ரன்வீர் சிங் மற்றும் மாதவன் நடித்த 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

Kavitha prasanna

'Durandhar 2' on a Box Office Rampage: Netflix Announces OTT Release Date!

பிரபல இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்', திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தது.

முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் மெகா ஹிட்

கடந்த டிசம்பர் மாதம் வெளியான 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 1,350 கோடிக்கு மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியான இரண்டாம் பாகம், ரசிகர்களிடையே இன்னும் கூடுதலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

மிக நீளமான திரைப்படம்

பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம், சுமார் 3 மணி நேரம் 49 நிமிடங்கள் நீளமுடையது.

1,800 கோடிக்கும் மேல் வசூல் சாதனை

நீளமான படமாக இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதையால் இதுவரை ரூ. 1,800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

துரந்தர் தி ரிவெஞ்ச் ஓடிடி ரிலீஸ்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தற்போது அந்த எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது.

துரந்தர் தி ரிவெஞ்ச் உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்

'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) கைப்பற்றியுள்ளது. அதன்படி, வரும் 14-ஆம் தேதி இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் வெளியாக உள்ளது.

ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பு?

பி62 ஸ்டுடியோஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம், திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பால் ரன்வீர் சிங் மற்றும் மாதவன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

=====