Family descendant of mathematical genius Ramanujan: 'Action Queen' Preethi Mukundan to team up with Dhanush!  google
சினிமா

கணித மேதை ராமானுஜரின் குடும்ப வாரிசு : தனுஷுடன் இணையும் 'ஆக்சன் குயின்' பிரீத்தி முகுந்தன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கணித மேதை சீனிவாச ராமானுஜரின் குடும்ப வாரிசான நடிகை பிரீத்தி முகுந்தன், தனுஷின் 56-வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Kavitha prasanna

Family descendant of mathematical genius Ramanujan: 'Action Queen' Preethi Mukundan to team up with Dhanush!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான நடிகை பிரீத்தி முகுந்தன் குறித்த ஒரு சுவாரசியமான குடும்பப் பின்னணியும், அவரது அடுத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு பற்றிய தகவலும் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கணித மேதை சீனிவாச ராமானுஜரின் பேத்தியா?

நடிகை பிரீத்தி முகுந்தன், உலகப் புகழ்பெற்ற இந்திய கணித மேதையான சீனிவாச ராமானுஜருடைய 'கொள்ளுப் பேத்தி' என்று சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இதன் பின்னணியில் உள்ள உண்மைத் தகவல் வெளிவந்துள்ளது.

கணித மேதை ராமானுஜருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. இருப்பினும், பிரீத்தி முகுந்தன் அவரது நெருங்கிய உறவினர் என்பது பாதியளவு உண்மையே. ராமானுஜரின் மனைவி ஜானகி அம்மாளால் தத்தெடுக்கப்பட்ட மகனான டபிள்யூ. எஸ். நாராயணனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் இந்த பிரீத்தி முகுந்தன்.

அந்த வகையில், ஜானகி அம்மாள் வழியில் இவர் கணித மேதை ராமானுஜரின் குடும்பத்தோடு மிக நெருங்கிய உறவுமுறையைக் கொண்டுள்ளார்.

தனுஷ் 56 படத்தில் பிரீத்தி முகுந்தன்?

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகி சமீபத்தில் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தின் மூலம் தென்னிந்த ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த கதாநாயகியாக வலம் வருகிறார் பிரீத்தி முகுந்தன்.

இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தில் (D56) கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ், பிரீத்தி முகுந்தன்

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரீத்தி முகுந்தனை படத்தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளது. இந்த காம்போ சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

=====