First female superhero film- OTT date announced! image courtesy-google
சினிமா

முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் - ஓடிடி தேதி அறிவிப்பு!

300 கோடி திரையரங்கு வசூல் செய்துள்ள இந்த படத்தின் ஓடிடி தேதி வெளியாகியுள்ள நிலையில், டிரைலர் வெளியாகி 1 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Bala Murugan

லோகா திரைப்படம்

First female superhero film- OTT date announced! மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று சொல்லப்படும் நிலையில், இந்த படத்தின் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

போஸ்டர் வெளியீடு

நடின இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் இப்படத்திற்கு மேலும் ஒரு அழகை சேர்த்து ஈர்த்துள்ளது. ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியுள்ளது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், லோகா திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, லோகா திரைப்படம் வரும் 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

அதிக பார்வையாளர்களை வென்ற டிரைலர்

போஸ்டரை தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் தனது யூடியுப் பக்கத்தில் டிரைலரை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிரைலர் வெளியான 21 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. புதிய கதைக்களத்தில் திரையில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சிகர்கள் கூட்டம் இருந்தாலும், ஓடிடி ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.