Trisha Reaction to Marriage Rumors source :trishakrishnan, Instagram
சினிமா

2 வயதில் 4 குழந்தைகள்.. இன்றைய கோட்டா முடிந்ததா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா!

Trisha Reaction to Marriage Rumors : த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ஸ்டைலில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

S Kavitha

Four Children at Age Two... Has Today's Quota Been Met? Trisha Puts an End to the Rumors!

தென்னிந்தியத் திரையுலகின் 'குயின்'

Actress Trisha Krishnan Quitting Cinema? :

ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்று தென்னிந்தியத் திரையுலகின் 'குயின்' என்று அழைக்கப்படும் நடிகை த்ரிஷா.

3 மாதங்களாக படங்களில் ஒப்பந்தமாகாத திரிஷா

இவர் கடந்த 3 மாதங்களாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என்றும் அவர் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், தற்போது த்ரிஷா தனது ஸ்டைலில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகல்? ரகசிய திருமணம்?

கடந்த சில வாரங்களாக நடிகை திரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் ரகசிய திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

மூத்த பத்திரிகையாளர் தகவல்

நடிகர் நடிகைகள் குறித்து அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் பரவுவது இயல்புதான் என்றாலும் மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில்,

த்ரிஷா புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை என்றும், அவர் சினிமாவை விட்டு விலகத் திட்டமிட்டுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

காட்டுத்தீ போல் பரவிய வதந்தி

சித்ரா லட்சுமணனே சொல்லிவிட்டாரே என த்ரிஷா குறித்த செய்தி காட்டுத்தீ போல சினிமா வட்டாரம் முழுவதும் பரவியது.

நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்த நிலையில் தான் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ஸ்டைலில் நையாண்டியாக பதிவிட்டுள்ளார்.

2 வயதில் 4 குழந்தைகள்

அவரது இஸ்டாகிராம் பதிவில், "நான் சினிமாவிலிருந்து விலகிவிட்டேன், ஒரு கோடீஸ்வரரைத் திருமணம் செய்துகொண்டேன், எனக்கு இரண்டு வயதில் நான்கு குழந்தைகள் (Quadruplets) இருக்கிறார்கள்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இன்றைய கற்பனை கதைகளுக்கான இலக்கு முடிந்துவிட்டதா?" என்று கிண்டலாகக் கேட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை த்ரிஷாவின் இந்த பதிவுதான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

உண்மை நிலவரம் என்ன ?

த்ரிஷாவின் இந்த பதிவின் மூலம் அவர் சினிமாவை விட்டு விலகப்போவதும் இல்லை, அவருக்கு ரகசிய திருமணம் முதலானவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்கள் என்பது தெரியவந்துள்ளது.

ரிலீசாக இருக்கும் த்ரிஷாவின் படங்கள்

நடிகை த்ரிஷா ஏற்கனவே நடித்து முடித்த பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.

நடிகர் சூர்யாவுடன் த்ரிஷா இணைந்து நடித்துள்ள ’கருப்பு’ திரைப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது.

மலையாளம் மற்றும் தெலுங்கில் த்ரிஷா

அதேபோல் மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரம் மோகன்லாலுடன் அவர் நடித்துள்ள ’ராம்’ திரைப்படம் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தெலுங்கில் நடித்துள்ள ’விஸ்வம்பரா’ என்ற பிரம்மாண்ட திரைப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிபிடத்தக்கது.

====